Tuesday, 25 December 2018

டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியின் முக்கியத்துவம்.



டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசியின் முக்கியத்துவம்:
நம்முடைய எதிர்கால தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முதலீடு எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நம்முடைய குடும்பத்தினரின் நிதி சார்ந்த `பாதுகாப்பு'. 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து டூ வீலர் வாங்கும்போது, பாதுகாப்புக்காக 1000 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்குகிறோம்; வாகனம் ஒட்டும்போது பாதுகாப்புக்காக சீட் பெல்ட் போட்டுக்கொள்கிறோம் அல்லவா? அதைப்போல நம்முடைய குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக ‘டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி' எடுக்க வேண்டும்.
ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்றாலே ஒரு சிலர் அபசகுனமாகப் பார்க்கிறார்கள். ஏனெனில் டேர்ம் இன்ஷூரன்ஸில் பாலிசிதாரர் மரணம் அடைந்தால்தான் கிளெய்ம் கிடைக்கும் என்பதே முக்கிய காரணம். டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து பிரீமியம் கட்டி எதுவும் நடக்கலைன்னா கட்டின பணம் வீண்தானே!” இதுதான் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் தவிர்க்க, பலரும் சொல்லும் காரணம். ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களைக் கேட்டால், “பெரிய அளவில் நிதிப் பிரச்னை ஏற்படாமல், குறைந்த செலவில் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ள இன்ஷூரன்ஸ் உதவியாக இருக்கிறது” என்கிறார்கள்.
 இன்றைய சூழ்நிலையில் இறப்பு என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஒரு வேளை நமக்கு இறப்பு நிகழ்ந்தால் நம்மை நம்பியே வாழ்க்கை நடத்தி வரும் நம்முடைய குடும்ப உறுப்பினர்களை யார் காப்பாற்றுவது?  இதற்கு முன் கூட்டுக் குடும்பமாக கூடி வாழ்ந்துவந்தோம். கூட்டுக் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், குடும்பத்திலுள்ள மற்றவர்கள் உதவி செய்வார்கள். இப்போது பெரும்பாலும் தனிக் குடித்தனம் ஆகிவிட்டதால், அதுபோன்ற நிலை இப்போது எங்குமே இல்லை. சொந்த வீடு, பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என பலதரப்பட்ட தேவைக்கு நிதித் திட்டமிடல் செய்கிறோம். அதேநேரத்தில், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த நிதித் திட்டமிடல் எதுவுமே நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், இந்த நிதித் திட்டமிடலில் முதல்படியாக, வருமானம் ஈட்டும் நபர் அவசியம் எடுக்க வேண்டிது `டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி'
பல நாடுகளில் டேர்ம் இன்ஷூரன்ஸ்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை, வருமானம் ஈட்டக்கூடியவர்கள் மட்டுமே இந்த பாலிசியை எடுக்க முடியும். டேர்ம் இன்ஷூரன்ஸ், நாம் கேட்கிற தொகைக்கு கவரேஜ் கிடைக்கும் வகையில் இருக்காது. மாறாக, கவரேஜ் தொகையானது பாலிசி எடுக்கும் நபரின் வருமானம், வயது, உடல்நிலை, வேலை ரிஸ்க், தனிப்பட்ட செலவுகள், குடும்பச் செலவுகள் (கல்வி, திருமணம், மருத்துவம் போன்றவை), கடன்கள், எதிர்காலத் திட்டங்கள், இன்னும் சர்வீஸ் உள்ள வருடங்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் கணக்கில் கொண்டுதான் நிர்ணயிக்கப்படும். ரிஸ்க் குறைவாக உள்ள பாலிசிதாரருக்கு பிரீமியம் குறைவாகவும், ரிஸ்க் அதிகமுள்ளவருக்கு பிரீமியம் அதிகமாகவும் இருக்கும். புகை, குடிப்பழக்கம் இருந்தால் ரிஸ்க்கின் அளவு அதிகமாகும். மேலும், உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் பிரீமியம் மாறும். 

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கத் தேவையான ஆவணங்கள். 
·         வருமானத்துக்கான ஆதாரம் (சம்பளச் சான்றிதழ் (அ) வருமானவரி தாக்கல் ஆதாரம்) 
·         அடையாள அட்டை மற்றும் முகவரி ஆதாரம் (ஆதார் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது)
·         வயதுச் சான்றிதழ் (பள்ளி மதிப்பெண் சான்றிதழ்)
·         புகைப்படம்.



குறைந்த பிரீமியம், அதிக கவரேஜ்! 
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் குறைவான பிரீமியம் செலுத்தினாலே அதிக கவரேஜ் கிடைக்கும். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டுமே கிளெய்ம் கிடைக்கும். மற்றபடி பிரீமியமாகச் செலுத்திய தொகை திரும்பத் தரப்பட மாட்டாது. பாலிசிக் காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் பாலிசி முடிவில் தொகை எதுவும் கிடைக்காது. டேர்ம் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, குறைந்த வயதில் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் குறைவாக இருக்கும். எனவே, இளம் வயதிலேயே இந்தப் பாலிசியை எடுப்பது நல்லது.  
“ஆண்டுக்கு 3 முதல் 5 லட்சம் ரூபாய் வருமானம் பெறும் 25 - 30 வயதுடைய ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு அவருடைய 65 வயது வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால், ஆண்டு பிரீமியம்  8,000 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும்.” ஆகவே டேர்ம் இன்ஷூரன்ஸ்க்காக நீங்கள் செலவிடும் தொகை உங்களின் தினசரி Coffee / Cool drinks விலை அளவு மட்டுமே.
மேலும் தற்போது Limited pay whole life Policy கிடைக்கிறது – அதாவது தங்களுடைய 99 வது வயது வரை கவரேஜ் எடுத்துக்கொண்டு பிரிமியம் தொகையை 10 வருடங்களில் செலுத்தி முடித்துவிடலாம்.

அதிக வயது, அதிக பிரீமியம்! 
50 வயதுக்கு அதிகமாக இருப்பவர்கள், அவர்களுடைய உடல் நலத்தைக் கருதி, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்காது என நினைக்கிறார்கள். 50 வயதுக்குப் பின் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களுக்கும் பாலிசி வழங்கப்படும். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் பிரீமியமானது இருக்கும். அதாவது கூடுதலாக சர்க்கரை, ரத்த அழுத்தம், வேறு ஏதாவது வியாதிகள் இருந்தால் அந்த வியாதிக்கான ரிஸ்க்கின் அடிப்படையில் பிரீமியம் கொஞ்சம் அதிகம் இருக்கும். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மரணம் ஏற்பட்டால்தான் கிளெய்ம் கிடைக்கும். ஒருவேளை விபத்தில் சிக்கி ஏதாவது ஊனம் ஏற்பட்டால் கிளெய்ம் கிடைக்காது எனக் கருதுகிறார்கள்.
இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க ரைடர்  எடுத்தாலே போதும். அதாவது, டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது சற்று கூடுதல் பிரீமியம் செலுத்தி விபத்தில் ஏற்படும் ஊனத்துக்கும் கவரேஜ் பெற முடியும். மேலும் மிக தீவிர நோய்களுக்கு எதிராகவும் ரைடர் பெனிஃபிட் மூலம் காப்பீடு பெறலாம். பட்டியலில் கொடுக்கப்பட்ட நோய்க்கான அறிகுறி கண்டறியப்பட்ட உடனேயே claim தொகை கிடைத்துவிடும். 
காப்பீடு தொகை (SUM ASURED) எவ்வளவு இருக்க வேண்டும்?
டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன்பு ஒரு விரிவான நிதி திட்டமிடல் அவசியமாகிறது. முதலில் உங்கள் எதிர்கால நிதித்தேவைகளை திட்டமிடுங்கள். குழந்தைகளின் படிப்பு பின் திருமணம் போன்ற செலவுகள் மற்றும் பொதுவாக மாதாந்திர செலவுகளின் தேவை எவ்வளவு என கணக்கிட்டுக்கொள்ளுங்கள் மற்றும் உங்களுக்கு இருக்கும் கடன்களையும் கணக்கிட்டுகொள்ளுங்கள், பிறகு SUM ASSURED தொகையை முடிவு செய்யுங்கள்.
பொதுவாக ஒருவர் தன் ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் நம் குடும்பத்தினர் நாம் இல்லாத போதும் அதே வாழ்க்கைத் தரத்தில் வாழ முடியும். மேலும் நாம் ஏற்கனவே திட்டமிட்ட எதிர்கால லட்சியங்களை நம் குழந்தைகள் சிரமமின்றி அடைய முடியும்.
நான் ஒருமுறை 50 வயதான ஒரு நிறுவன அதிபரான வாடிக்கையாளரை சந்தித்து இன்ஷுரன்ஸ் பாலிசிகள் அறிமுகப்படுத்தி பேசும்போது தாம், 10 பாலிசிகளில் வருடத்திற்கு ரூ.4,50,000/- பிரீமியம் செலுத்துவதாகவும், மேற்கொண்டு தனக்கு பாலிசி எதுவும் தேவையில்லை என்றும் தெரிவித்தார். பொறுமையாக அவரிடம் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றி எடுத்துக்கூறி அவர் டேர்ம் பாலிசி எடுத்திருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் “ நான் என்ன என்ன திட்டத்தில் முதலீடு செய்திருகிறேன் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. நான் நடப்பு கணக்கு வைத்திருக்கும் “……..” வங்கியின் கிளை மேலாளரே வருடத்திற்கு ஒரு முறை நேரில் என் அலுவலகத்திற்கே வந்து தங்கள் வங்கியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாலிசிகளில் ஒன்றை என் நலன் கருதி எனக்கு உகந்த பாலிசியை எடுத்துக்கொள்ள சொல்வார். அப்படி எடுத்ததுதான் இந்த பாலிசிகள்” என்றார். எல்லா பாலிசிகளையும் எடுத்துவரசொல்லி பார்வையிட்டபோது, 6 யூலிப் பாலிசிகளிலும், 4 எண்டோவ்மென்ட் பாலிசிகளிலும் முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது. 10 பாலிசிகளையும் சேர்த்து மொத்த Sum Assured ரூ.45லட்சம் மட்டுமே. பிறகு அவரிடம் கிளை மேலாளர் அவர் target க்காக மட்டுமே உங்களை பாலிசி எடுக்க செய்திருக்கிறார் என்று எடுத்துக்கூறி, ஏற்கனவே ஆண்டுக்கு ரூ.50,000 என்று 5 வருடம் செலுத்தப்பட்ட ஒரு யூலிப் பாலிசியை நிறுத்த சொல்லிவிட்டு, ICICI Prudential Life insurance-ன் iProtect Smart பாலிசி எடுத்துக்கொள்ள சொன்னேன். ரூ.1கோடிக்கு ஆயுள் காப்பீடு, ரைடர் பெனிஃபிட் மூலம் மேலும் 1கோடிக்கு விபத்து காப்பீடு, மற்றும் 10லட்சத்திற்கு critical illness cover, இவை அனைத்திற்கும் ஆண்டுக்கு ரூ.50,000/- பிரீமியம் மட்டுமே(பாலிசிதாரரின் வயது 50). தற்போது இவர் விபத்தால் உயிரிழக்க நேர்ந்தால் இவர் குடும்பத்திற்கு ரூ.2கோடி40லட்சம் கிடைக்கும்.
ஆகவே இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க திட்டமிடும்போது முதலில் செய்ய வேண்டியது டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது மட்டுமே. மேலும் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும்போது எந்த விதமான செண்டிமென்ட் மற்றும் எமோஷனல் முடிவும் எடுக்காதீர்கள். தீர விசாரித்து சுயமாக முடிவு எடுங்கள்.

  
சிக்கல் இல்லாத CLAIM:
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது, கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையாக, சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். ஏனெனில் பாலிசி எடுக்கும்போது தரும் தகவல்களில் ஏதாவது தவறு இருந்தால், கிளெய்ம் நிராகரிக்க அல்லது தாமதமாக வாய்ப்புள்ளது.
 டாக்டர் மற்றும் வக்கீலிடம் பொய் சொல்லக் கூடாது என்ற உண்மையை அனைவரும் அறிவர். காப்பீடு செய்பவரிடமும் எந்தப் பொய்யும் சொல்லக் கூடாது. உதாரணத்திற்கு, நீங்கள் 25 வயதில், உங்கள் மருத்துவ அறிக்கைகளை மறைத்து, ஒரு காப்பீட்டில் உங்கள் பணத்தை முதலீடு செய்கிறீர்கள். காப்பீடு காலத்திற்குள் எதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு, நீங்கள் இறந்தால், அதன்பிறகு, காப்பீடு நிறுவனம் மறைக்கப்பட்ட உங்கள் ஆரோக்கியக் குறைபாட்டால் தான் நீங்கள் இறந்தீர்கள் என்பதைக் கண்டுபிடித்தால் உங்கள் காப்பீடு பணம் முழுவதும் பறி போய்விடும். உங்கள் காப்பீட்டை முழுவதுமாகத் தள்ளுபடி செய்து விடுவார்கள். ஆகவே, உங்கள் வயது, ஆரோக்கியக் குறைபாடு, புகைப் பழக்கம், மற்ற காப்பீடு தகவல்கள், உங்கள் மருத்துவப் பின்புலம், போன்றவற்றை மறைக்காமல் பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் காப்பீடு நிறுவனம் உங்கள் மனுவை நிராகரிக்கும் வாய்ப்பைத் தவிர்க்கலாம்.
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எப்படி க்ளெய்ம் செய்ய வேண்டும், அதற்குத் தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்த தகவல்களையும், பாலிசியில் யாரை நாமினியாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதையும் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொள்வது அவசியம். சரியானபடிக்கு கிளெய்ம் செய்தால் சிக்கல் இல்லாமல் இழப்பீடு கிடைக்கும்.
எந்த நிறுவனத்தில் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுப்பது?
நம் நாட்டில் LIC of India என்ற ஒரு பொதுத் துறை காப்பீடு நிறுவனமும் மற்றும் 23 தனியார் நிறுவனங்களும் உள்ளன (SBI Life-ம் PN Paribas என்ற அயல் நாட்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் செயல்படும் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் தான்). இந்த 24 காப்பீட்டு நிறுவனங்களும் IRDAI கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஆகவே இந்த 24 நிறுவனங்களிலும் உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்கும்.
ஆகவே நீங்கள் பாலிசி எடுக்கும் முன்பு கீழ் கண்ட தகவல்களை ஆய்வு செய்து சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள் (காப்பீட்டின் விலைக்கு கடைசி முக்கியத்துவம் கொடுங்கள்).
·         காப்பீட்டு நிறுவனத்தின் சொத்து மதிப்பு (AUM)
·         Claim Settlement Ratio
·         காப்பீட்டு நிறுவனத்தை எளிதில் அனுக கூடிய வாய்ப்பு.
·         காப்பீட்டின் விலை




மேலும் விவரங்களுக்கு:

D. Sendil Kumar,
Pondicherry / Cuddalore.
Mobile -9442327591

எனது மற்ற கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட லிங்க்கு-களை க்ளிக் செய்யவும்.


மானியத்துடன் வீட்டுக் கடன் பெற - பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டம் :




SBI வங்கியில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி:


சிபில் ஸ்கோர் பற்றி தெரிந்துக் கொள்ள :








அன்பு நண்பர்களே,

நான் தற்போது Financial servicing செய்வதுடன், சீ லேண்ட் பேக்கேஜிங்க் என்ற பேப்பர் ப்ளேட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள ரீட்டெய்லர் மற்றும் ஹோல்சேலர்களிடம் இருந்து ஆர்டர்கள் எதிர்பார்கிறேன்.   ஆதரவு தாருங்கள் !!!