D. செந்தில்குமார் - Financial Consultant - 9442327591
பாரத ஸ்டேட் வங்கியில் கீழ் கண்ட தேவைகளுக்கு வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது :
- வீடு வாங்குவதற்கு
- வீடு கட்டுவதற்கு
- வீட்டு மனை (PLOT) வாங்குவதற்கு
- அப்பார்ட்மண்ட்- களில் ஃப்ளாட் (FLAT) வாங்குவதற்கு
- வீடு விரிவாக்கம் செய்வதற்கு
- வீடு புதுபித்தல் செய்வதற்கு
- மற்ற வங்கிகளில் உள்ள வீட்டுக்கடனை SBI க்கு மாற்றம் செய்வதற்கு
வீட்டுக்கடன் வாங்க தகுதி உடையவர்கள் யார் ?
மாத தவணை செலுத்தும் அளவுக்கு நிலையான வருமானம் உள்ளவர்கள்- குறிப்பாக -
- மாத சம்பளம் வாங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள்
- வருமான வரி செலுத்தும் சுய தொழில் செய்பவர்கள்
SBI-ல் வீட்டுக்கடன் பெறுவதால் உள்ள நன்மைகள்:
- மிக குறைவான வட்டி விகிதம்
- அடமானமாக வைக்கப்படும் சொத்துக்களுக்கு அதிக பாதுகாப்பு
- அதிகமான தவணை செலுத்தும் காலம் (30 வருடம் வரை)
- தினசரி குறையும் கடன் நிலுவைத்தொகைக்கேற்ப வட்டி (Interest on daily reducing Balance)
- கடன் முடியும்வரை குறைந்த ப்ரீமியத்தில் ஆயுள் காப்பீடு -(இது மிக நல்ல திட்டம், கடன் தவணை செலுத்தும் காலத்தில் விண்ண்ப்பதாரர் உயிரிழக்க நேரிட்டால், மீதமுள்ள தவணைத்தொகை முழுவதுமாக காப்பீட்டு நிறுவனத்தால் செலுத்தப்பட்டு கடன் முடிக்கப்பட்டு வாரிசுதாரரிடம் சொத்து ஆவணங்கள் ஒப்படைக்கப்படும்.- ஆக உங்கள் சொத்துக்களை வாரிசுகளுக்கு கொடுங்கள், உங்கல் கடன்களை அல்ல என்பதே இதன் நோக்கம்)
- SBI-ல் கடன் பெற SBI-ல் சேமிப்பு கணக்கு தேவையில்லை. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்தே ECS மூலம் தவனை செலுத்தலாம்.
- மாதத் தவனைக்கு மேற்கொண்டு நீங்கள் செலுத்தும் கூடுதல் தொகை உங்கள் அசல் நிலுவையில் வரவு வைக்கப்பட்டு மறுநாளில் இருந்து மீதமுள்ள அசல் தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். இவ்வாறு அவ்வபோது கூடுதல் தொகை செலுத்தி விரைவில் கடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம். இவ்வாறு கூடுதலாக செலுத்தப்படும் தொகைக்கு charges எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை..
SBI-ல் வீட்டுக்கடன் தொகை எவ்வளவு பெறமுடியும்?
உங்கள் வயது, வருமானம், மற்றும் ப்ராஜக்ட் காஸ்ட் (வீடு கட்ட தேவையான மொத்த தொகை (அ) வாங்கபோகும் வீட்டின் மொத்த மதிப்பு), இவை மூன்றையும் வைத்து தான் நிர்னயிக்கப்படுகிறது.
வயது: - பொதுவாக ஒருவர் 60 வயது(Salaried) /65 வயது (Self Employed) வரை கடன் திருப்பி செலுத்த முடியும்..
வருமானம் : பொதுவாக ஒருவர் தனது மாத வருமானத்தில் இருந்து 50% வரை மாத தவணை செலுத்த முடியும். (Including all existing and proposed EMIs)
ப்ராஜக்ட் காஸ்ட் :
- வீடு கட்ட மொத்த எஸ்டிமேஷனில் இருந்து 80%-ம்,
- கட்டி முடிக்கப்பட்ட (Ready to Occupy) வீடு / ஃப்ளாட் மதிப்பில் 80%-ம்
- வீட்டு மனை வாங்கும்போது அதன் மார்க்கெட் மதிப்பில் 70%-ம்கடனாக பெற முடியும்.
உதாரணமாக 45 வயது நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார், மாத சம்பளமாக ரூ.35,000/- பெறுகிறார், அவர் வீடு கட்ட 40 இலட்சம் எஸ்டிமேட் வைத்திருக்கிறார் என்றால்
அவருக்கு ரூ. 17 இலட்சம் வீட்டுக்கடன் 15 வருடத்திற்க்கு ஒப்புதல் அளிக்கப்படும்
அவரது மாத சம்பளம் ரூ.70,000/- என்றால் அவருக்கு ரூ. 32 இலட்சம் வீட்டுக்கடன் 15 வருடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும்
குடும்ப உறுப்பினர்களை கூட்டு விண்ணப்ப்தாரராக (Co-Applicant) சேர்த்து, அவர்களுடைய வருமானத்தையும் கணக்கில் எடுத்து கூடுதல் கடன் தொகை பெறலாம்.
குடும்ப உறுப்பினர்களை கூட்டு விண்ணப்ப்தாரராக (Co-Applicant) சேர்த்து, அவர்களுடைய வருமானத்தையும் கணக்கில் எடுத்து கூடுதல் கடன் தொகை பெறலாம்.
வட்டி விகிதம் :
மிக குறைந்த வட்டி விகிதமாக ஆண்டுக்கு 7.35%-ம், வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது.
மேலும் கடன் தவணை தொகை கணக்கீடு செய்ய கிழே உள்ள லிங்கை க்லிக் செய்யவும்.
SBI Home Loan EMI Calculator
கடன் பெற தேவையான ஆவணங்கள்::
* விண்ணப்பதாரரின் புகைப்படம்
* புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று
* முகவரிச் சான்று
* வருமானச் சான்று
* மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்)
* தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்)
* 18 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி)
* சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்)
* உரிய அதிகாரியிடன் பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல்.
* கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்)
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள என்னுடைய அலைபேசி எண் - 9442327591ஐ அழைக்கவும்:
மேலும் விவரங்களுக்கு:
D. Sendil Kumar,
Financial Consultant,
Pondicherry / Cuddalore.
Pondicherry / Cuddalore.
Mobile -9442327591
எனது மற்ற கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட லிங்க்கு-களை க்ளிக் செய்யவும்.
மானியத்துடன் வீட்டுக் கடன் பெற - பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டம் :
சிபில் ஸ்கோர் பற்றி தெரிந்துக் கொள்ள :
அன்பு நண்பர்களே,
நான் தற்போது லோன் சர்வீஸிங்க்
செய்வதுடன், சீ லேண்ட் பேக்கேஜிங்க் என்ற பேப்பர் ப்ளேட்கள் தயாரிக்கும் நிறுவத்தை
நடத்தி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள ரீட்டெய்லர் மற்றும் ஹோல்சேலர்களிடம் இருந்து
ஆர்டர்கள் எதிர்பார்கிறேன். ஆதரவு தாருங்கள் !!!





Good
ReplyDeleteVery useful information. Thanks.
ReplyDeleteVery useful information. Thanks.
ReplyDeletevery informative. thank you sir
ReplyDeleteNice writeup
ReplyDelete2014 at 11:09
ReplyDeleteDuraipandikasi Rameswaram
Duraipandikasi Rameswaram நன்றி
22 June 2014 at 23:48
Kavi Arasu
Kavi Arasu car...... Vangalam
22 June 2014 at 19:26
Sathish Jaga Sara
Sathish Jaga Sara Thanks idea's
22 June 2014 at 18:41
Jeeva Rajkumar
Jeeva Rajkumar Niruvanainkalil veli purijamal suja tholi parpavaraajin
22 June 2014 at 18:30
Manmathan Manmathan
Manmathan Manmathan Thanks....
28 April at 01:08
Siva Kumar
Siva Kumar பயனுள்ள பகிர்வு நன்றி
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநான் பழைய வீடு வாங்க இருக்கிறேன். வில்லங்க சான்று,பத்திரம் விற்பவர் பெயரில் உள்ளது.ஆனால் பட்டா இல்லை,பட்டா வாங்கி தருகிறேன் என்று கூறுகிறார்.வாங்குவதற்கான ஒப்பந்தம் போடலாமா?
ReplyDeleteவீடு விற்பவர் அந்த வீட்டை பிறரிடம் இருந்து வாங்கி கிரயம் செய்திருந்தால் பட்டா தேவைப்ப்டாது. இதுவே அவர் தான செட்டில்மண்டாக பெற்றிருந்தால், பட்டா அவர் பெயரில் மற்றம் செய்வது நல்லது,
ReplyDeleteஅனைவரது கருத்துக்களுக்கும் நன்றி !!!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபொதுவாக விண்ணப்பித்த பிறகு பணம் பெற எத்தனை மாதம் ஆகும்??
ReplyDeleteபொதுவாக விண்ணப்பித்த பிறகு பணம் பெற எத்தனை மாதம் ஆகும்??
ReplyDeleteஅனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்பிக்கும் பட்சத்தில் 15 நாட்களுக்குள் கடன் தொகை பெறலாம்.
ReplyDeletePMAY scheme பற்றி தெரிந்து கொள்ள கீழ்கண்ட லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
ReplyDeletehttps://sendilsbihomeloan.blogspot.in/2018/04/blog-post.html
PMAY scheme பற்றி தெரிந்து கொள்ள கீழ்கண்ட லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
ReplyDeletehttps://sendilsbihomeloan.blogspot.in/2018/04/blog-post.html
மாதம்21000 சம்பளம் எவ்வளவு லோன் கிடைக்கும் கட்டிய வீட்டை வாங்க
ReplyDelete12 லட்சம் வரை கடன் தொகை பெறலாம்.
ReplyDeleteகடன் வாங்குபவரின் பெயரில் தான் வீடு கட்ட வேண்டுமா??
ReplyDeletenice thanks for sharing
ReplyDeletegraphic-designer-job-in-kolkata
Thanks you for sharing this information about Home Loan. It's very Helpful.
ReplyDeleteநான் முதலில்இடம் வாங்குவதற்கு கடன் கிடைக்க என்ன வழி
ReplyDelete