Saturday, 10 June 2017

சிபில் ஸ்கோர் பற்றிய சில குறிப்புகள் - A Small note about CIBIL Score

சிபில் ஸ்கோர் (CIBIL Score) பற்றிய சில குறிப்புகள் :
















To read this blog in English please click the link given below:


Credit Information Bureau of India Limited என்பதன் சுருக்கமே CIBIL ஆகும்.
சிபில் நிறுவனம் ரிசர்வ் வங்கியால் அங்கிகரிக்கப்பட்ட் கடன் பற்றிய தகவல்களை அளிக்கும் நிறுவனம். (தற்போது இந்நிறுவ்னத்தின் பெயர் CIBIL Transunion என்று மாற்ற்ப்ப்ட்டுள்ளது)

அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரின் கடன் கணக்குகள் பற்றிய தகல்வல்களை அவ்வபோது சிபில் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வார்கள்.
தங்களிடம் இருக்கும் வாடிக்கையாளரின் கடன் பற்றிய தகவல்களைக் கொண்டு சிபில் நிறுவனம் கடன் மதிப்பீடு அளிக்கிறது, இதுவே சிபில் ஸ்கோர் (CIBIL Score) எனப்படுகிறது.

வாடிக்கையாளரின் கடன் திரும்ப செலுத்தும் முறையை (Repayment behavior) கணக்கிட்டு அவர்களுக்கு 300 முதல் 900 வரை கடன் மதிப்பீடு அளிக்கப்படுகிறது. 




பொதுவாக சிபில் ஸ்கோர் 750 க்கு மேல் இருந்தால் நல்ல ஸ்கோராக கருதப்படும். மேலே உள்ள படத்தில் 700 க்கு மேல் பச்சை நிறத்திலும் 700 க்கு கீழ் சிவப்பு வண்ணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 700 க்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் கடன் அதிக ரிஸ்க் என்றும் 700 க்கு மேல் குறைவான ரிஸ்க் என்றும் கருதப்படுகிறது.

அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நமது கடன் விண்ணப்பத்தை பரீசீலனை செய்யும் முன் சிபில் அறிக்கை மற்றும் ஸ்கோரை (CIBIL Report and Score) சரி பார்ப்பார்கள். இதில் நாம் முன்பு வாங்கிய கடன்கள் அதை திருப்பி செலுத்திய முறை. ஏற்கனவே வாங்கிய கடன் சரிவர திரும்ப செலுத்தாமல் நிலுவைத்தொகை இருப்பின் அது பற்றிய தகவல், இவை அனைத்தும் சிபில் ரிப்போர்ட் மூலம் தெரிய வரும். ஒரு வங்கியில் கடன் பெற்று சரியாக திரும்ப செலுத்தாமல், மற்றொரு வங்கியை அனுகி கடன் பெறுவது இப்போது சாத்தியமில்லாத விஷயம்.

சிபில் ஸ்கோர் குறைவதற்க்கான காரணங்கள்:

மாத தவணை திரும்ப செலுத்தும் முறை : மாத தவணையை குறிப்பிட்ட் தேதியில் செலுத்த வேண்டும். அப்படி தவறினால் அந்த மாத கடைசி தேதிக்குள் வங்கியிலோ அல்லது அங்கிகரீக்கப்பட்ட முகவரிடமோ செலுத்தி ரசீது பெற்ற்க்கொள்ள வேண்டும். 3 நாட்கள் கழித்து அந்த ரசீதை வைத்து வங்கியையோ அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தையோ தொடர்பு கொண்டு நீங்கள் செலுத்திய பணம் உங்கள் கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டதா என்பதை சரி பார்த்துக்கொள்ளவும்.

தொடர்ந்து 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் பாக்கி வைத்து தவணை செலுத்தி வந்தால் உங்கள் சிபில் ஸ்கோர் குறைந்துவிடும்.

உதாரணம் 1 : ஒருவர் நிதி சிக்கல் காரணமாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மாத தவணை செலுத்த தவறிவிட்டார், பிறகு ஏப்ரல் மாதத்தில் இருந்து தவறாமல் தவணை செலுத்தி வந்து கடன் கால முடிவில் மூன்று மாத நிலுவை தவணை தொகை செலுத்தி கடனை முடிக்கிறார். இவரது சிபில் ஸ்கோர் பெருமளவு குறைந்திருக்கும், காரணம் ஏப்ரல் மாதத்தில் இவர் செலுத்திய தவணைத்தொகை ஜனவரி மாத தவணையாக வரவு வைக்கப்படும். ஆகவே இவர் கடன் முடியும் காலம் வரை 90 நாட்கள் கழித்து தவணை செலுத்துபவர் ஆகிறார்.
உதாரணம் 2 : ஒருவர் 36 மாத தவணைக்கு கடன் பெற்றிருப்பார். கடைசி மாத தவணை செலுத்த மறந்திருப்பார். பிறகு கடன் கணக்கு முடிந்த்துவிட்டது என்று கருதி இருப்பார். வங்கியும் மிக குறைந்த நிலுவைத்தொகையாக இருப்பதால் பொருட்படுத்தாமல் விட்டிருப்பார்கள். இவர் 2 வருடத்திற்கு பிறகு வேறு கடனுக்கு விண்ணப்பித்தால் இவரது சிபில் ஸ்கோர் வெகுவாக குறைந்திருக்கும். 240 DPD காட்டும். குறைந்த கடன் தொகைக்கு வாங்கும் ஏசி. வாஷிங் மிஷின், கம்ப்யூட்டர், இரு சக்கர வாகன கடன் போன்ற கடன்களில் இப்படி நடக்க வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. கடன் முடிந்ததும் கடன் கொடுக்கும் நிறுவனத்திடம் NOC வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

இரு சக்கர வாகனம், நாங்கு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களுக்கு வாங்கும் கடனை முடித்த பின், கடன் கொடுக்கும் நிறுவனத்திடம் NOC வாங்கி RTO அலுவலகத்தில் கொடுத்து உங்கள் RC புத்த்கத்தில் Hypothecation cancel செய்ய வேண்டும்.

Overdraft / Cashcredit : OD / CC கணக்கு வைத்திருப்பவர்கள் கடன் தொகைக்கான வட்டி தொகை மாதாமாதம் வங்கியில் பிடித்தம் செய்ய தேவையான balance வைத்திருக்க வேண்டும். மாதாமாதம் வட்டி செலுத்த தவறினால், சிபில் ஸ்கோர் குறைந்துவிடும்.

நகைக் கடன் : நகைக் கடன் வாங்கினால் வங்கியுடனான ஒப்பந்தப்படி 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ கடன் தொகை செலுத்தி நகையை திருப்பவோ அல்லது மறு அடகு வைக்க வேண்டும். வங்கியின் நிபந்தனைப்படி உரிய காலத்தில் வட்டி செலுத்த வேண்டும். தவறினால் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.

கடன் அட்டை (க்ரெடிட் கார்டு) : கடன் அட்டை பயன்படுத்துபவர்கள் பில்லில் குறிப்பிட்டிருக்கும் தவனை தேதிக்குள் மொத்த தொகையையும் (Total amount due) செலுத்திவிட வேண்டும். அப்படி செலுத்த முடிந்த தொகை மட்டுமே கடன் அட்டையிலிருந்து செலவு செய்ய வேண்டும். அப்படி முழு தொகை செலுத்த முடியாத பட்சத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு மாத தவணையாக மாற்றிக்கொள்ளவும்.

எக்காரணத்தைக் கொண்டும் குறைந்த பட்ச தொகை (Minimum Amount Due) மட்டும் செலுத்தி கடனை நீடிக்காதீர்க.ள். இதை Cash Rotation என்று சொல்லுவார்கள் இதனால் உங்கள் ஸ்கோர் வெகுவாக பாதிக்கும். மேலும் இந்த கேஷ் ரொட்டேஷன் தொகைக்கு 48% முதல் 60% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. கவனம் தேவை.

அதிக பிணை இல்லா கடன்கள் (Un-secured loans) : தனி நபர் கடன் மற்றும் கடன் அட்டை (personal loan & credit cards) ஆகியவை பிணையில்லா கடங்கள் ஆகும். அதிக அளவில் இது போன்ற கடன்கள் வாங்குவது உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கும். ஆகவே வாகனகடன், வீட்டுக்கடன் போன்ற பிணையுடன் கூடிய கடன்கள் (Secured Loans) வாங்குவது உங்கள் ஸ்கோரை பாதிக்காது.

அதிக அளவு கடன் விண்ணப்பங்கள் : ஒரு நிதி நிறுவனத்திலோ அல்லது வங்கியிலோ கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணத்தை தெரிந்துக்கொண்டு அதை சரி செய்துவிட்டு மறுபடி அதே வங்கியிலோ அல்லது வேறு வங்கியிலோ விண்ணப்பிக்கலாம். அப்படி செய்யாமல் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் விண்ணப்பித்து பல இடங்களில் நிராகரிக்கப்பட்டால், உங்கள் சிபில் ஸ்கோர் வெகுவாக பாதிக்கப்படும். சிலர் ஒரே சமயத்தில் 4 அல்லது 5 வங்கிகளில் விண்ணப்பிப்பார்கள், இதனாலும் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.
சில சிபில் ரிப்போர்ட்டில் பின் வரும் குறியீடுகள் காணப்படும். இவைகளால் சிபில் ஸ்கோர் வெகுவாக பாதிப்படையும் மற்றும் உங்கள் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் - Settled, Writtenoff, Post Writtenoff Settled, Suit Filed, SUB, SMA.

சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்:
கடன் முழுவதுமாக செலுத்தாமல் இருப்பின் அந்த வங்கியை அனுகி கடன் கணக்கை முழுவதுமாக பாக்கி செலுத்தி முடித்துவிட்டு NOC பெற்றுக்கொள்ளவும். முடிந்தவரை தள்ளுபடி இல்லாமல் கடனை முடிக்க வேண்டும். குறிப்பாக அசல் (principle) தொகையில் தள்ளுபடி இல்லாமல் முடிக்கவும். (கடன் அட்டைக்கு இது பொருந்தாது, முடிந்தவரை அசல் தொகையிலும் தள்ளுபடி வாங்கி செட்டில் செய்யலாம்)

ஏசி, வாஷிங் மிஷின், டிவி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் மாத தவணையில் வாங்கி தவறாமல் தவணை செலுத்துவதன் மூலம் நம் சிபில் ஸ்கோரை முன்னேர செய்யலாம். இது போன்ற பொருட்களுக்கு கடன் கொடுக்க சிபில் ஸ்கோர் பார்க்கமாட்டார்கள். மேலும் கடன் தொகை உடனே அனுமதி (sanction) தருவார்கள்.

சிபில் ஸ்கோர் தெரிந்துகொள்வது எப்படி : வங்கிகளில் கடன் விண்ணப்பம் சமர்பிக்கும் முன்பு நமது சிபில் ஸ்கோரை சரி பார்த்துக்கொள்வது நல்லது. சிபில் நிறுவன வளை தளம் இதற்க்கான வாய்ப்பை நமக்கு அளிக்கிறது.

வருடத்தில் ஒரு முறை நம் சிபில் ஸ்கொர் மற்றூம் அறிக்கையை நாம் இலவசமாக பெறலாம். அதற்க்கு கீழ்கண்ட லிங்க்-ஐ க்லிக் செய்யவும். வளை தளத்திற்கு செல்லும் முன் உங்கள் பான் அட்டை மற்றூம் கடைசியாக கடன் வாங்கிய கடன் தொகை, வங்கி பொன்ற தகவல்களை சரி பார்த்து வைத்துக்கொள்ளவும். தகவல்களை சரியாக உள்ளீடு செய்தால் உடண்டியாக உங்கள் ஈமெயிலுக்கு ரிப்போர்ட் அனுப்பபடும். தவறாக உள்ளீடு செய்தால் நீங்கள் உங்கள் அடையாள மற்றூம் முகவரிச்சான்று ஸ்கேன் செய்து பதிவேற்றவேண்டும். அந்த முகவரிக்கு ரிப்பொர்ட் அனுப்பிவைக்கப்படும்

இலவச சிபில் ஸ்கோர் மற்றூம் ரிப்போர்ட் பெற கீழ்கண்ட லிங்க்-ஐ க்லிக் செய்யவும்.


இலவச சலுகையை பயன்படுத்திய பிறகு கட்டண சேவையை பயன்படுத்தலாம்.  ஒருமுறை ரூ.550/- செலுத்தி சிபில் ஸ்கொர் ம்ற்றும் அறிக்கை பெற்றூக்கொள்ளலாம். ரூ.800/- செலுத்தி வருடத்தில் இரண்டு முறையும், ரூ1,200/- செலுத்தி வருடத்தில் நாங்கு முறையும் சிபில் ஸ்கொர் ம்ற்றும் அறிக்கை பெற்றூக்கொள்ளலாம். கட்டணம் செலுத்தி சிபில் ஸ்கொர் ம்ற்றும் அறிக்கை பெற கீழ்கண்ட லிங்க்-ஐ க்லிக் செய்யவும்.

https://www.cibil.com/creditscore/

இந்த கட்டுரையை படித்தவர்கள் தவறாமல் தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

மேலும் விவரங்களுக்கு:
D. Sendil Kumar,
Financial Consultant
Pondicherry / Cuddalore.
Mobile -9442327591
E-mail : loans.shri@yahoo.com


எனது மற்ற கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட லிங்க்கு-களை க்ளிக் செய்யவும்.

SBI வங்கியில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி:

மானியத்துடன் வீட்டுக் கடன் பெற - பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டம் :











































அன்பு நண்பர்களே,
நான் தற்போது லோன் சர்வீஸிங்க் செய்வதுடன், சீ லேண்ட் பேக்கேஜிங்க் என்ற பேப்பர் ப்ளேட்கள் தயாரிக்கும் நிறுவத்தை நடத்தி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள ரீட்டெய்லர் மற்றும் ஹோல்சேலர்களிடம் இருந்து ஆர்டர்கள் எதிர்பார்கிறேன்.   ஆதரவு தாருங்கள் !!!  

   

1 comment:

  1. Great insights! It's always refreshing to read content that goes beyond surface-level and actually adds value. Looking forward to more posts like this — well done!

    By the way, if anyone’s exploring smarter cash flow options, Networth Advisory offers reliable Purchase Invoice Financing solutions tailored for growing businesses.

    ReplyDelete