Monday, 27 March 2017

மற்ற வங்கிகளில் உள்ள வீட்டுக் கடனை SBI க்கு மாற்றுவதால் லாபம் உண்டா?

08/04/2018 அன்று update செய்யப்பட்டது

D. செந்தில்குமார்  - Financial Consulatant - 9442327591


நீங்கள் முதலில் வீட்டுக் கடனை வாங்கிய வங்கியிலிருந்து SBI  வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றிக்கொள்வது இப்போது மிக எளிதான விஷயம். வங்கிக்கு வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. சிறிய வேறுபாடுகளாக இருந்தாலும் பயனாளருக்கு அது மிகப் பெரிய விஷயம்தான்.


20 லட்சம் - 25 ஆண்டுகளுக்கு கடன் பெற்ற ஒருவர் - அரை சதவீதம் 0.5% குறைவான வட்டி விகிதத்துக்கு மாறும் பொழுது அவருக்கு மாதத்திற்க்கு ரூ.685/- மிச்சமாகிறது. ஆக 25 ஆண்டுகளுக்கு ரூ.1,87,500/- மிச்சமாகிறது.


sbi-யில் மற்ற வங்கியிலிருந்து மாற்றிக்கொள்ளும் வீட்டுக்கடனுக்கு பரீசீலனைக்கட்டணம் கிடையாது (0 Processing fees for Home Loan Takeover form other banks).


ஆகவே எனது கருத்து என்னவென்றல் - உங்கள் கடன்  திரும்ப செலுத்தும் நிலுவை காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் SBI-யை விட 0.5% அதிக வட்டி விகிதத்தில் உள்ளவர்கள் தங்கள் கடனை SBI-க்கு  மாற்றிக்கொள்வது லாபகரமானது.


வீட்டுக்கடனை ஒரு வங்கியிலிருந்து SBI  வங்கிக்கு மாற்ற, முதலில் கடன் பெற்ற வங்கியிடம் உங்கள் கடன் கணக்கு தொடர்பான கீழ்க்கண்ட ஆவணங்களை பெற வேண்டும்.



  • Home Loan Sanction Letter
  • Loan Outstanding Letter 
  • Loan Account Statement and
  • List of Documents Deposited with the Bank.

வங்கியில் பெறப்பட்ட ஆவணங்களுடன் வீட்டுக்கடன் பெற தேவையான கீழ்க்கண்ட ஆவணங்களையும் சேர்த்து SBI யில் சமர்ப்பிக்க வேண்டும்.


  • விண்ணப்பதாரரின் புகைப்படம்
  • புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று
  • முகவரிச் சான்று
  • வருமானச் சான்று
  • மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்)
  •  தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்)
  • 18 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி)
  • சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்)
  • உரிய அதிகாரியிடன் பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல். 
SBI-ல் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் பரீசீலிக்கப்பட்டு கடனுக்கான ஒப்புதல் வழங்கப்படும். நிலுவைத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்ட பிறகு பழைய வங்கி உங்களுடைய பழைய கடனை முடித்து வைக்கும். இந்த நடைமுறை முடிந்த உடன் உங்களுடைய சொத்துப் பத்திரங்கள் SBI-யிடம் ஒப்படைக்கப்படும்.

SBI-ல் உங்கள் கடன் தற்போதய வட்டி விகிதத்தில் இருக்கும்.

மேலும் Home Loan Take over to SBI தொடர்பாக தெரிந்து கொள்ள என்னுடைய அலைபேசி எண் - 9442327591ஐ  அழைக்கவும்:

மேலும் விவரங்களுக்கு:
D. Sendil Kumar,
Financial Consulatant,
Pondicherry / Cuddalore.
Mobile -9442327591








No comments:

Post a Comment