Tuesday, 18 April 2017

கூடுதல் கடன் தொகை பெறுவது எப்படி?



நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக் கடனை நம்பியே வீடு வாங்கும் திட்டத்தில் இருப்போம். என்னதான் சேமிப்பு இருந்தாலும், வீட்டுக் கடன்தான் நம் கனவு கவிழ்ந்துவிடாமல் கரை சேர்க்க உதவும். மனை வாங்கி வீடு கட்டுவதாக இருந்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குவதாக இருந்தாலும் நடுத்தர மக்கள் பெரும்பாலானோரின் நிலை இதுதான். இன்றைய பொருளாதார சூழலில் நம் சேமிப்பை மட்டும் நம்பி நம் கனவை நனவாக்க நினைப்பது கஷ்டத்தில் கொண்டுபோய்த் தள்ளிவிடும். நம் சேமிப்பு ஆரம்பத் தொகைக்கு மட்டுமே பயன்படும். உதாரணமாகச் சிலர் மனையை மட்டும் தங்கள் சேமிப்பைக் கொண்டு வாங்குவார்கள். வீடு கட்ட வங்கிக் கடனைச் சார்ந்திருப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க இருப்பவர்கள் ஆரம்பத் தொகைக்குச் சேமிப்பைப் பயன்படுத்துவார்கள்.
வீட்டுக் கடனைப் பொறுத்தவரை நாம் கட்டப் போகும், வாங்கப் போகும் வீட்டின் மதிப்பில் சுமார் 80 சதவிகிதத் தொகையைக் கடனாகத் தருவார்கள். மீதித் தொகைக்குத்தான் நம் சேமிப்பு பயன்படும். இந்தத் தொகை உறுதியாக உங்கள் சேமிப்பாக இருந்தால் நலம். இதற்கும் கடன் வாங்க நேரிட்டால் கடும் சிரமத்திற்கு உள்ளாகிவிடும். வங்கி தரும் கடன் தொகை எவ்வளவு இருக்கும் என்பது நமது திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டது. குடும்பச் செலவு போக நம் மாத வருமானம் எவ்வளவு எனக் கணக்கிட்டு நமது திருப்பிச் செலுத்தக்கூடிய தகுதியைக் கணக்கிடுகிறார்கள். இந்த இடத்தில்தான் நாம் திட்டமிட்ட தொகை கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பார்ப்போம். 
வீட்டுக்கடன் வாங்க வங்கியை அனுகும் முன் நாம் சில திட்டமிடல்களை செய்ய வேண்டும். பொதுவாக நம் மாத நிகர வருமானத்தில் 50% சதவிகித தொகையைத்தான் மாத தவணையாக செலுத்தமுடியும். இது ஏற்கனவே நாம் செலுதிக்கொண்டிருக்கும் தவணை மற்றும் இப்போது பெற பொகும் வீட்டுக்கடனுக்கன தவணை தொகையும் அடங்கும்.
இதை வைத்து தான் வங்கியில் உங்கள் திருப்பி செலுத்தும் திறனை கண்க்கிடுகிறார்கள்.  உங்கள் திரும்ப செலுத்தும் திறனை  வைத்து தான் உங்கள் கடன் தொகை வங்கியால் நிர்ணயிக்கப்படுகிறது. 
கீழ்க்கண்ட வகையில் உங்கள் திரும்ப செலுத்தும் திறனை (Repayment Capability) அதிகப்படுத்திக்கொள்ளலாம் :
1. சிறிய கடன்களை அடைப்பது :
பொதுவாக வீட்டுக்கடன் 10 வருடத்திற்க்கு மேற்கொண்ட நீண்ட கால கடனாக அதிக தொகை வழங்கப்படும். ஆகவே நாம் ஏற்கனவே வைத்திருக்கும் சிறிய கடன்களை அடைப்பதால் நம் திருப்பி செலுத்தும் திறன் அதிகரிக்கும், 
தனி நபர் கடன், இரண்டு சக்கர வாகன கடன், இதர வாகன கடன், சிறிய தொழில் கடன் போன்றவற்றை அடைப்பதால் நம் திருப்பி செலுத்தும் திறன் அதிகரிக்கும், 
2. கடன் திரும்ப செலுத்தும் காலத்தை அதிகரிப்பது :
உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம். நீங்கள் எதிர்பார்த்த வீட்டுக் கடன் கிடைக்கவில்லையென்றால், திரும்பச் செலுத்தும் வீட்டுக் கடனின் கால அளவை அதிகரிக்கலாம். அதாவது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் தொகை ரூ.10 ஆயிரம், இதை 10 ஆண்டுகளில் திரும்ப செலுத்துகிறீர்கள் எனில் உங்களுக்குக் குறைந்த அளவே கடன் கிடைக்கும். அப்போது இதே ரூ.10 ஆயிரம் தொகையை நீங்கள் 20 ஆண்டுகளில் செலுத்தினால் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ப கடன் தொகையும் கூடும். எதிர்பார்க்கும் கடன் கிடைக்கும்.
இப்படி வீட்டுக் கடனைக் கட்டும் ஆண்டுகளை அதிகரிக்கும்போது, வட்டிக்குச் செல்லும் தொகை அதிகரிக்கும். இந்த வட்டிச் செலவைக் குறைக்க, வரும் ஆண்டுகளில் இடையிடையே மாத தவணை போகக் கூடுதல் தொகையை (போனஸ், இதர வரவுகளைக் கொண்டு) கட்டி, கடன் பாக்கியைக் குறைத்துக் கொள்ளலாம்.
3. குடும்ப உறுப்பினர்களை கூட்டு விண்ணப்பதாரராக சேர்ப்பது :
கூடுதல் கடன் தொகை பெறுவதற்கு வருமானம் உள்ள ரத்த சம்பந்தம் உள்ள சொந்தங்களை (Blood Relatives) கூட்டு விண்ணப்பதாரராக சேர்க்கலாம். 
கணவன், மனைவி, அப்பா, அம்மா, மகன், மகள், சகோதரன், திருமணமாகாத சகோதரி ஆகியோர் மட்டுமே கூட்டு விண்ணப்பதாரராக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
திருப்பி செலுத்தும் திறன் கணக்கிடப்படும்போது கூட்டு விண்ண்ப்பதாரரின் வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதனால் கூடுதல் தொகை கடனாக பெறலாம்.
4. வாடகை, விவசாயம், மற்றும் இதர வருமானத்துக்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பது:
மாத சம்பளம் வாங்குபவர்கள் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் கொடுக்கும் Form 16 ஐ, ஆடிட்டரிடம் கொடுத்து, அதனுடன் இதர வருமானத்திற்க்கான சான்றிதழ்களை சமர்பித்து IT Filing செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் கணக்கில் காட்டலாம். ஃபைல் செய்யப்பட்ட ஐடி ரிட்டன்சை வங்கியில் சமர்ப்பித்து கூடுதல் கடன் தொகை பெறலாம்.
தொழில் செய்வோரும்  வருடாந்திர ஐடி ஃபைலிங்க் போது ஆடிட்டரிடம் ஆலோசித்து  கூடுதல் வருமானத்தை கணக்கில் கொண்டு வருவதன் மூலம் கூடுதல் கடன் தொகை பெறுவதற்க்கான வாய்ப்பை உருவாக்கிகொள்ளலாம். நிதி திட்டமிடலே இதற்க்கு முக்கியமானது.
மேலும் நிதி திட்டமிடல் பற்றி தெரிந்துக் கொள்ள எனது அலைபேசி எண்- 9442327591ஐ அழைக்கவும்.


மேலும் விவரங்களுக்கு:
D. Sendil Kumar,
Financial Cosultant
Pondicherry / Cuddalore.
Mobile -9442327591







No comments:

Post a Comment