Wednesday, 17 April 2024

Buisness stragies to achieve in life

 

Set Clear Goals and Objectives: Define specific, measurable, achievable, relevant, and time-bound (SMART) goals for your business. These goals will provide direction and focus for your efforts.

1.   Understand Your Market: Conduct thorough market research to understand your target audience, competition, industry trends, and potential opportunities. Use this information to tailor your products or services to meet the needs of your customers.

2.   Develop a Unique Value Proposition: Clearly articulate what sets your business apart from competitors. Highlight your unique strengths, whether it's innovative technology, superior customer service, or niche expertise.

3.   Build a Strong Brand: Invest in building a strong brand identity that resonates with your target audience. Consistently communicate your brand values, messaging, and visual identity across all channels.

4.   Focus on Customer Experience: Prioritize delivering exceptional customer experiences at every touchpoint. Happy customers are more likely to become repeat buyers and brand advocates.

5.   Innovate Continuously: Foster a culture of innovation within your organization. Encourage employees to generate new ideas, experiment with new approaches, and embrace change.

6.   Invest in Talent: Surround yourself with a talented team that shares your vision and values. Invest in training and development to help your employees reach their full potential.

7.   Optimize Operations: Continuously seek ways to improve efficiency and reduce costs in your business operations. Streamline processes, leverage technology, and automate repetitive tasks wherever possible.

8.   Embrace Technology: Stay abreast of technological advancements that can help you streamline operations, improve productivity, and enhance your offerings. Embrace digital transformation to stay competitive in the digital age.

9.   Monitor Key Performance Indicators (KPIs): Track relevant KPIs to measure the success of your business strategies. Regularly review performance metrics and adjust your strategies accordingly.

10.                     Forge Strategic Partnerships: Collaborate with complementary businesses or industry leaders to expand your reach, access new markets, and leverage shared resources.

11.                    Remain Agile and Flexible: In today's rapidly changing business landscape, agility is key. Be prepared to adapt to changing market conditions, consumer preferences, and industry trends.

12.                    Manage Risks Effectively: Identify potential risks to your business and develop strategies to mitigate them. Whether it's financial, operational, or strategic risks, having a proactive risk management plan in place is essential.

13.                    Stay Customer-Centric: Keep your customers at the center of everything you do. Listen to their feedback, anticipate their needs, and continuously strive to exceed their expectations.

14.                    Cultivate a Growth Mindset: Foster a culture of continuous learning and improvement within your organization. Encourage creativity, resilience, and a willingness to embrace new challenges.

Wednesday, 24 June 2020

முத்ரா கடன் திட்டம் பற்றிய குறிப்புகள்













பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் :


சிறு குறு தொழில்களுக்கு வங்கிக் கடன் எளிதில் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு, குறு தொழில்கள், வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை. இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என்று அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. வங்கிக்கடன் கிடைக்காததால் தனியார் நிதி நிறுவனங்களை இத்தொழில் செய்வோர் நாடுகின்றனர். அங்கு, அதிக வட்டியில் கடன் பெறுவதால், இத்தொழில்களால் எதிர்பார்த்த வளர்ச்சியை பெற முடியவில்லை. ஆகவே சிறு, குறு தொழில் (MSE) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. சிறு, குறு, தொழில்களுக்கு வர்த்தக வங்கிகள் வழங்கும் கடன் தொகையை மறு நிதியாக அந்த வங்கிகளுக்கு முத்ரா வங்கி அளித்துவிடும்.






சுய தொழில் தொடங்குவோருக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்காகப் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் வகைச் செய்கிறது. இளம் தலைமுறையைத் தொழில் முனைவோராக உருவாக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி சுய தொழில் தொடங்க முன் வரும் தொழில் முனைவோர் அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வகைச் செய்வதே இதன் பிரதான நோக்கமாகும். 

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் பயன் பெற விரும்புவோர், தொடங்கும் தொழிலுக்கு ஏற்றவாறு 10 லட்சம் வரை கடன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும்.
புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் மற்றும் ஏற்கனவே தொழில் செய்துகொண்டு அதை மேலும் விரிவு படுத்த விரும்புபவர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் கடன் பெற்று பயனடையலாம்.

கீழ்கண்ட அனைத்து தொழில் பிரிவினரும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்:

உற்பத்தி தொழில்.: உதாரணத்திற்கு – மெழுகு வத்தி, தாம்பூல பை, கிளினிங் பவுடர், டிஷ் வாஷ் பார்,  பேப்பர் பிளேட், பிரியாணி கப்… போன்ற பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்

வர்த்தக தொழில்: உதாரணத்திற்கு - தள்ளுவண்டி காய்கறி/பழ கடைகள், துணி கடைகள், பேக்கரி கடைகள், மளிகை கடைகள், ஹார்ட்வேர்ஸ், ஏஜென்சீஸ், எலக்ட்ரிகல் கடைகள்… போன்ற வியாபாரம் செய்யும் கடைகள்.

சேவை தொழில்: உதாரணத்திற்கு - சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், லேத் ஒர்க்ஷாப், DTP சென்டர்… போன்ற ஜாப் ஒர்க் செய்யும் தொழில்கள்.

குறிப்பு: பண்ணை தொழில் சார்ந்த மாட்டு பண்ணை, கோழி பண்ணை, விவசாயம், காலன் வளர்ப்பு, போன்ற தொழில்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதில்லை. மேலும் சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு, கல்வி கடன், தனிநபர் கடன், தனிநபர் வாகன கடன் ஆகியவைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதில்லை.

ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல் (Quatation) கொடுக்க வேண்டும். அதனடிப்படையில் வங்கிகள் நேரிடையாக விற்பனையாளரின் பெயருக்கு காசோலையாக வழங்குவார்கள். Quotation தொகைக்கு குறைந்த பட்சம் 10% தொழில் முனைவோரின் சொந்த முதலீடாக இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு - 18 வயது முடிந்திருக்க வேண்டும்.


இதில் கடன்பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம். மேலும் PMMY APPLICATION FORM என இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பட்துடன் - அடையாள சான்று, இருப்பிட சான்று, அண்மையில் எடுக்கப்பட்ட புகைபடம், உபகரணங்கள், எந்திரங்கள் வாங்குவதற்கு தேவையான Quotation, மற்றும் விரிவான திட்ட அறிக்கை (Project Report), மற்றும் வங்கி கிளையால் கேட்கப்படும் இதர ஆவணங்களுடன் சமர்பிக்கவும். 


முக்கிய குறிப்பு : உங்கள் விண்ணப்பத்தை பரீசீலிக்கும் போது தங்கள் CIBIL Report-ஐ சரி பார்ப்பார்கள். அதில் நீங்கள் ஏற்கனவே வங்கிகளில் கடன் வாங்கி சரியாக திருப்பி செலுத்தாமல் இருப்பது தெரியவந்தால் உங்கள் கடன் விண்ணப்பம் உடனே நிராகரிக்கப்படும். சிபில் ரிப்போர்ட் பற்றிய விவரங்கள் தெரிந்துகொள்ள கீழ்கண்ட லிங்க்க்-ஐ க்ளிக் செய்யவும்.


இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே. இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கபடும். நீங்கள் வாங்கும் கடனை வங்கி நிர்ணயிக்கும்  மாத தவணையாக (EMI) 5 வருடம் வரை திருப்பி செலுத்தலாம்.  

நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது நடைமுறை மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும்.

ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது. அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம் (கடன் கொடுக்கும் வங்கிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது). உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும். இந்த கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் கடன் வழங்கும்.

இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய வகைகளில் வழங்கபடுகிறது.

சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை கடன் பெறலாம்.

கிஷோர் (KISHOR) - இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம்  வரை கடன் பெறலாம்.

தருண்(TARUN) - இத்திட்டம் மூலமாக  ஐந்து லட்சம்  முதல் பத்து லட்சம்  வரை கடன் பெறலாம்.


உங்கள் தொழில் கடன் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்கள் மற்றும் தங்களுடனான நேர்காணல் மற்றும் கள ஆய்வு செய்த பிறகு மேற்கண்ட திட்டத்தில் எந்த திட்டத்தில், எவ்வளவு கடன் தொகை வழங்குவது என்பதை வங்கி கிளை மேலாளர் முடிவு செய்வார். முத்ரா கடன் திட்டத்தை பொறுத்தவரை கிளை மேலாளரின் முடிவே இறுதியானது.

ஆகவே நீங்கள் மேலாளரை சந்திக்கும்போது எந்த தொழிலுக்காக கடன் தேவைப்படுகிறது. அந்த தொழிலில் உங்களுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறது. புதிதாக தொழில் தொடங்குபவராக இருந்தால் எப்படி, எதற்காக இந்த தொழிலை தேர்ந்தெடுத்தீர்கள், இந்த தொழிலுக்கு எவ்வளவு கடன் தொகை தேவைப்படுகிறது, கடன் தொகையை எவ்வாறு பயன்படுத்தப்போகிறீர்கள் என்ற சரியான விளக்கத்துடன் திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து உடன் வைத்திருங்கள். 



(குறைந்த கட்டணத்தில் திட்ட அறிக்கை தயாரித்து கொடுக்க எனது Whatsup 9442327591  என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.)








முத்ரா கடன் திட்டத்தை பொறுத்தவரை கிளை மேலாளரின் முடிவே இறுதியானது. ஆனால், பொதுவாக வங்கி மேலாளர் தங்கள் கடன் கோரிக்கை மீது ஆர்வம் காட்ட மாட்டார், ஏனென்றால் அவர் தன்னுடைய வேலை பலுவிற்கிடையே தங்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்ய தங்கள் உற்றார் உறவினரோ அல்லது தங்கள் மீது அக்கறை கொண்டவரோ அல்ல. அவர் திருப்தியடையும்படி செய்யப்போகும் தொழிலில் தங்களுடைய அறிவு & அனுபவத்தை வெளிப்படுத்துங்கள். தங்கு தடையின்றி கடன் தொகையை திருப்பி செலுத்தும் அளவிற்கு இந்த தொழிலில் நல்ல லாபத்துடன் வருமானம் ஈட்ட முடியும் என்பதை உற்சாகமாக தெரியப்படுத்துங்கள். ஒரு முறைக்கு பல முறை மேலாளரை சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு அவரிடம் கடன் சம்பந்தமான கொரிக்கையை தொடர்ந்து வையுங்கள். இவர் சரிப்பட்டு வரவில்லை என்றால் உங்கள் ஊரிலுள்ள மற்றொரு வங்கியை அனுகுங்கள். இப்படி பட்டியலில் உள்ள அனைத்து வங்கிகளிலும் முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துக்கள்.





உங்கள் கடன் விண்ணப்பத்தை கிளை மேலாளர் நிராகரிக்கும் பட்சத்தில், அவர் அப்படி நிராகரிக்க சொல்லும் காரணங்கள் நியாயமானதாக இல்லை என்றால், தாங்கள் அந்த வங்கியின் மேல் அதிகாரியிடமோ அல்லது https://www.mudra.org.in/Default/DownloadFile/Nodal-Officers-MUDRA.pdf என்ற லிங்க்-இல் இருந்து Nodal officers list டவுன்லோடு செய்து தங்கள் மாவட்ட அதிகாரியிடம் புகார் தெரிவிக்கவும்.
பொதுவாக மேலாளர்கள் சொல்வது “எற்கனவே இந்த கிளையில் முத்ரா திட்டத்தில் கடன் வாங்கியவர்கள் திரும்ப செலுத்தவில்லை, ஆகவே இத்திட்டத்தின் கீழ் கடன் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.” இது தவறான தகவல். நீங்கள் உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.







ஏற்கனவே தொழில் செய்பவர்கள் அபிவிருத்தி கடனுக்கு கோரிக்கை வைக்கும்போது அவர்களிடம் - “GST ரிட்டர்ன் மற்றும் IT ரிட்டர்ன் இருந்தால் மட்டுமே கடன் விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியும்” என்று தெரிவிப்பார்கள். பொதுவாக குறு தொழிலுக்கு இரண்டுமே தேவைப்படாது. 
(பொதுவாக ஆண்டுக்கு ரூ40 லட்சம் வரை தமிழகத்திற்குள் வரவு செலவு (Turnover) செய்பவர்கள் GST பதிய தேவையில்லை. எந்த விதமான ஆவனங்களும் maintain பண்ண தேவையில்லை. வெறும் கேஷ் பில் மட்டுமே போடலாம். மற்றும் அனைத்து தொழில் தொடர்பான செலவுகளுக்கு பிறகு உங்கள் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- மேற்கொண்டு இருந்தால் IT ரிட்டர்ன்ஸ் தேவைப்பட்டால் file செய்து சமர்பிக்கவும்.)



(பொதுவாக முத்ரா திட்டத்தில் கடன் பெறுபவர் கடன் தொகை செலுத்த தவறிவிட்டால், மத்திய அரசின் CGTMSE என்ற இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் வாரா கடன் நிலுவைத்தொகையில் 85% தொகை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அளிக்கப்படும். இதனால் வங்கிகள் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். ஆகவே இந்த திட்டத்தில் அதிக கெடுபிடி இன்றி கடன் வழங்க வங்கிகள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அப்படி கடன் திரும்ப செலுத்த தவறும் நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் வாழ்நாள் முழுதும் வங்கிகளில் கடன் வாங்க இயலாது. தங்களது பிள்ளைகளின் கல்விக்கடனில் நீங்கள் கூட்டு விண்ணப்பதாரராகும் போது தங்கள் பிள்ளைகளின் கல்வி கடன் விண்ணப்பம் கூட நிராகரிக்கப்படும். அகவே எப்போதும் கடனை செலுத்தி முடிக்க வேண்டும் என்ற முனைப்போடு இருங்கள்.)

கடன் வழங்கும் வங்கிகள்:  
• 27 Public Sector Banks
• 17 Private Sector Banks
• 31 Regional Rural Banks (RRBs)
• 4 Co-operative Banks
• 36 Micro Finance Institutions (MFIs)
• 25 Non Banking Financial Companies (NBFCs)

Public Sector Banks

1 State Bank of India
2 State Bank of Bikaner & Jaipur
3 State Bank of Travancore
4 Bank of Baroda
5 Bank of India
6 Bank of Maharastra
7 Canara Bank
8 Corporation Bank
9 Dena Bank
10 IDBI Bank Ltd.
11 Indian Bank
12 Oriental Bank of Commerce
13 Punjab National Bank
14 Syndicate Bank
15 UCO Bank
16 Union Bank of India
17 Vijaya Bank
18 Allahabad Bank
19 Andhra Bank
20 Bhartiya Mahila Bank
21 Central Bank of India
22 Indian Overseas Bank
23 Punjab & Sind Bank
24 State Bank of Hyderabad.
25 State Bank of Mysore
26 State Bank of Patiala
27 United Bank of India

Private Sector Banks

1 Axis Bank Ltd.
2 Catholic Syrian Bank Ltd.
3 City Union Bank Ltd.
4 DCB Bank Ltd.
5 Federal Bank Ltd.
6 HDFC Bank Ltd.
7 ICICI Bank Ltd.
8 Indus Ind Bank Ltd.
9 Jammu & Kashmir Bank Ltd.
10 Karnataka Bank Ltd.
11 Karur Vysya Bank Ltd.
12 Kotak Mahindra Bank Ltd.
13 Nainital Bank Ltd.
14 South Indian Bank
15 Tamilnad Mercantile Bank Ltd.
16 The Ratnakar Bank Ltd.
17 Yes Bank Ltd.



நன்றி,

இந்த கட்டுரை பற்றிய தங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கமெண்ட் பாக்ஸில் தவறாமல் பதிவிடவும்.

முத்ரா கடன் திட்டத்தில் கடன் வாங்க நீங்களே நேரடியாக வங்கியில் அனுகவும்.  மேலும் இத்திட்டம் தொடர்பாக என்னுடைய அலைபேசி எண்ணை தொட்ர்பு கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். நிச்சயம் நேரம் கிடைக்கும் போது பதில் பதிவிடுகிறேன். 


(குறைந்த கட்டணத்தில் திட்ட அறிக்கை தயாரித்து கொடுக்க மட்டும் எனது Whatsup 9442327591 என்ற எண்ணிற்கு Whatsup செய்யவும், Call செய்ய வேண்டாம்)

அனைத்து விதமான கடன் தேவைகள், இன்ஷூரன்ஸ் சேவை தொடர்பான தேவைகளுக்கு புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அழைக்கவும்.


Thanks and regards,
Sendil kumar D,
9442327591.


எனது மற்ற கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட லிங்க்கு-களை க்ளிக் செய்யவும்:


சிபில் ஸ்கோர் பற்றி தெரிந்துக் கொள்ள :


SBI வங்கியில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி:


மானியத்துடன் வீட்டுக் கடன் பெற - பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டம் :
http://sendilsbihomeloan.blogspot.com/2018/04/blog-post.html


கூடுதல் கடன் தொகை பெறுவது எப்படி. 
http://sendilsbihomeloan.blogspot.com/2017/04/blog-post.html






அன்பு நண்பர்களே,
நான் தற்போது Financial Servicing செய்வதுடன், சீ லேண்ட் பேக்கேஜிங்க் என்ற பேப்பர் ப்ளேட்கள் தயாரிக்கும் நிறுவத்தை நடத்தி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள ரீட்டெய்லர் மற்றும் ஹோல்சேலர்களிடம் இருந்து ஆர்டர்கள் எதிர்பார்கிறேன்.   ஆதரவு தாருங்கள் !!! 



Tuesday, 25 December 2018

டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியின் முக்கியத்துவம்.



டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசியின் முக்கியத்துவம்:
நம்முடைய எதிர்கால தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முதலீடு எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நம்முடைய குடும்பத்தினரின் நிதி சார்ந்த `பாதுகாப்பு'. 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து டூ வீலர் வாங்கும்போது, பாதுகாப்புக்காக 1000 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்குகிறோம்; வாகனம் ஒட்டும்போது பாதுகாப்புக்காக சீட் பெல்ட் போட்டுக்கொள்கிறோம் அல்லவா? அதைப்போல நம்முடைய குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக ‘டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி' எடுக்க வேண்டும்.
ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்றாலே ஒரு சிலர் அபசகுனமாகப் பார்க்கிறார்கள். ஏனெனில் டேர்ம் இன்ஷூரன்ஸில் பாலிசிதாரர் மரணம் அடைந்தால்தான் கிளெய்ம் கிடைக்கும் என்பதே முக்கிய காரணம். டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து பிரீமியம் கட்டி எதுவும் நடக்கலைன்னா கட்டின பணம் வீண்தானே!” இதுதான் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் தவிர்க்க, பலரும் சொல்லும் காரணம். ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களைக் கேட்டால், “பெரிய அளவில் நிதிப் பிரச்னை ஏற்படாமல், குறைந்த செலவில் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ள இன்ஷூரன்ஸ் உதவியாக இருக்கிறது” என்கிறார்கள்.
 இன்றைய சூழ்நிலையில் இறப்பு என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஒரு வேளை நமக்கு இறப்பு நிகழ்ந்தால் நம்மை நம்பியே வாழ்க்கை நடத்தி வரும் நம்முடைய குடும்ப உறுப்பினர்களை யார் காப்பாற்றுவது?  இதற்கு முன் கூட்டுக் குடும்பமாக கூடி வாழ்ந்துவந்தோம். கூட்டுக் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், குடும்பத்திலுள்ள மற்றவர்கள் உதவி செய்வார்கள். இப்போது பெரும்பாலும் தனிக் குடித்தனம் ஆகிவிட்டதால், அதுபோன்ற நிலை இப்போது எங்குமே இல்லை. சொந்த வீடு, பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என பலதரப்பட்ட தேவைக்கு நிதித் திட்டமிடல் செய்கிறோம். அதேநேரத்தில், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த நிதித் திட்டமிடல் எதுவுமே நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், இந்த நிதித் திட்டமிடலில் முதல்படியாக, வருமானம் ஈட்டும் நபர் அவசியம் எடுக்க வேண்டிது `டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி'
பல நாடுகளில் டேர்ம் இன்ஷூரன்ஸ்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை, வருமானம் ஈட்டக்கூடியவர்கள் மட்டுமே இந்த பாலிசியை எடுக்க முடியும். டேர்ம் இன்ஷூரன்ஸ், நாம் கேட்கிற தொகைக்கு கவரேஜ் கிடைக்கும் வகையில் இருக்காது. மாறாக, கவரேஜ் தொகையானது பாலிசி எடுக்கும் நபரின் வருமானம், வயது, உடல்நிலை, வேலை ரிஸ்க், தனிப்பட்ட செலவுகள், குடும்பச் செலவுகள் (கல்வி, திருமணம், மருத்துவம் போன்றவை), கடன்கள், எதிர்காலத் திட்டங்கள், இன்னும் சர்வீஸ் உள்ள வருடங்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் கணக்கில் கொண்டுதான் நிர்ணயிக்கப்படும். ரிஸ்க் குறைவாக உள்ள பாலிசிதாரருக்கு பிரீமியம் குறைவாகவும், ரிஸ்க் அதிகமுள்ளவருக்கு பிரீமியம் அதிகமாகவும் இருக்கும். புகை, குடிப்பழக்கம் இருந்தால் ரிஸ்க்கின் அளவு அதிகமாகும். மேலும், உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் பிரீமியம் மாறும். 

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கத் தேவையான ஆவணங்கள். 
·         வருமானத்துக்கான ஆதாரம் (சம்பளச் சான்றிதழ் (அ) வருமானவரி தாக்கல் ஆதாரம்) 
·         அடையாள அட்டை மற்றும் முகவரி ஆதாரம் (ஆதார் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது)
·         வயதுச் சான்றிதழ் (பள்ளி மதிப்பெண் சான்றிதழ்)
·         புகைப்படம்.



குறைந்த பிரீமியம், அதிக கவரேஜ்! 
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் குறைவான பிரீமியம் செலுத்தினாலே அதிக கவரேஜ் கிடைக்கும். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டுமே கிளெய்ம் கிடைக்கும். மற்றபடி பிரீமியமாகச் செலுத்திய தொகை திரும்பத் தரப்பட மாட்டாது. பாலிசிக் காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் பாலிசி முடிவில் தொகை எதுவும் கிடைக்காது. டேர்ம் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, குறைந்த வயதில் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் குறைவாக இருக்கும். எனவே, இளம் வயதிலேயே இந்தப் பாலிசியை எடுப்பது நல்லது.  
“ஆண்டுக்கு 3 முதல் 5 லட்சம் ரூபாய் வருமானம் பெறும் 25 - 30 வயதுடைய ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு அவருடைய 65 வயது வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால், ஆண்டு பிரீமியம்  8,000 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும்.” ஆகவே டேர்ம் இன்ஷூரன்ஸ்க்காக நீங்கள் செலவிடும் தொகை உங்களின் தினசரி Coffee / Cool drinks விலை அளவு மட்டுமே.
மேலும் தற்போது Limited pay whole life Policy கிடைக்கிறது – அதாவது தங்களுடைய 99 வது வயது வரை கவரேஜ் எடுத்துக்கொண்டு பிரிமியம் தொகையை 10 வருடங்களில் செலுத்தி முடித்துவிடலாம்.

அதிக வயது, அதிக பிரீமியம்! 
50 வயதுக்கு அதிகமாக இருப்பவர்கள், அவர்களுடைய உடல் நலத்தைக் கருதி, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்காது என நினைக்கிறார்கள். 50 வயதுக்குப் பின் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களுக்கும் பாலிசி வழங்கப்படும். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் பிரீமியமானது இருக்கும். அதாவது கூடுதலாக சர்க்கரை, ரத்த அழுத்தம், வேறு ஏதாவது வியாதிகள் இருந்தால் அந்த வியாதிக்கான ரிஸ்க்கின் அடிப்படையில் பிரீமியம் கொஞ்சம் அதிகம் இருக்கும். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மரணம் ஏற்பட்டால்தான் கிளெய்ம் கிடைக்கும். ஒருவேளை விபத்தில் சிக்கி ஏதாவது ஊனம் ஏற்பட்டால் கிளெய்ம் கிடைக்காது எனக் கருதுகிறார்கள்.
இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க ரைடர்  எடுத்தாலே போதும். அதாவது, டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது சற்று கூடுதல் பிரீமியம் செலுத்தி விபத்தில் ஏற்படும் ஊனத்துக்கும் கவரேஜ் பெற முடியும். மேலும் மிக தீவிர நோய்களுக்கு எதிராகவும் ரைடர் பெனிஃபிட் மூலம் காப்பீடு பெறலாம். பட்டியலில் கொடுக்கப்பட்ட நோய்க்கான அறிகுறி கண்டறியப்பட்ட உடனேயே claim தொகை கிடைத்துவிடும். 
காப்பீடு தொகை (SUM ASURED) எவ்வளவு இருக்க வேண்டும்?
டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன்பு ஒரு விரிவான நிதி திட்டமிடல் அவசியமாகிறது. முதலில் உங்கள் எதிர்கால நிதித்தேவைகளை திட்டமிடுங்கள். குழந்தைகளின் படிப்பு பின் திருமணம் போன்ற செலவுகள் மற்றும் பொதுவாக மாதாந்திர செலவுகளின் தேவை எவ்வளவு என கணக்கிட்டுக்கொள்ளுங்கள் மற்றும் உங்களுக்கு இருக்கும் கடன்களையும் கணக்கிட்டுகொள்ளுங்கள், பிறகு SUM ASSURED தொகையை முடிவு செய்யுங்கள்.
பொதுவாக ஒருவர் தன் ஆண்டு வருமானத்தின் 10 முதல் 20 மடங்கு வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் நம் குடும்பத்தினர் நாம் இல்லாத போதும் அதே வாழ்க்கைத் தரத்தில் வாழ முடியும். மேலும் நாம் ஏற்கனவே திட்டமிட்ட எதிர்கால லட்சியங்களை நம் குழந்தைகள் சிரமமின்றி அடைய முடியும்.
நான் ஒருமுறை 50 வயதான ஒரு நிறுவன அதிபரான வாடிக்கையாளரை சந்தித்து இன்ஷுரன்ஸ் பாலிசிகள் அறிமுகப்படுத்தி பேசும்போது தாம், 10 பாலிசிகளில் வருடத்திற்கு ரூ.4,50,000/- பிரீமியம் செலுத்துவதாகவும், மேற்கொண்டு தனக்கு பாலிசி எதுவும் தேவையில்லை என்றும் தெரிவித்தார். பொறுமையாக அவரிடம் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றி எடுத்துக்கூறி அவர் டேர்ம் பாலிசி எடுத்திருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் “ நான் என்ன என்ன திட்டத்தில் முதலீடு செய்திருகிறேன் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. நான் நடப்பு கணக்கு வைத்திருக்கும் “……..” வங்கியின் கிளை மேலாளரே வருடத்திற்கு ஒரு முறை நேரில் என் அலுவலகத்திற்கே வந்து தங்கள் வங்கியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாலிசிகளில் ஒன்றை என் நலன் கருதி எனக்கு உகந்த பாலிசியை எடுத்துக்கொள்ள சொல்வார். அப்படி எடுத்ததுதான் இந்த பாலிசிகள்” என்றார். எல்லா பாலிசிகளையும் எடுத்துவரசொல்லி பார்வையிட்டபோது, 6 யூலிப் பாலிசிகளிலும், 4 எண்டோவ்மென்ட் பாலிசிகளிலும் முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது. 10 பாலிசிகளையும் சேர்த்து மொத்த Sum Assured ரூ.45லட்சம் மட்டுமே. பிறகு அவரிடம் கிளை மேலாளர் அவர் target க்காக மட்டுமே உங்களை பாலிசி எடுக்க செய்திருக்கிறார் என்று எடுத்துக்கூறி, ஏற்கனவே ஆண்டுக்கு ரூ.50,000 என்று 5 வருடம் செலுத்தப்பட்ட ஒரு யூலிப் பாலிசியை நிறுத்த சொல்லிவிட்டு, ICICI Prudential Life insurance-ன் iProtect Smart பாலிசி எடுத்துக்கொள்ள சொன்னேன். ரூ.1கோடிக்கு ஆயுள் காப்பீடு, ரைடர் பெனிஃபிட் மூலம் மேலும் 1கோடிக்கு விபத்து காப்பீடு, மற்றும் 10லட்சத்திற்கு critical illness cover, இவை அனைத்திற்கும் ஆண்டுக்கு ரூ.50,000/- பிரீமியம் மட்டுமே(பாலிசிதாரரின் வயது 50). தற்போது இவர் விபத்தால் உயிரிழக்க நேர்ந்தால் இவர் குடும்பத்திற்கு ரூ.2கோடி40லட்சம் கிடைக்கும்.
ஆகவே இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க திட்டமிடும்போது முதலில் செய்ய வேண்டியது டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது மட்டுமே. மேலும் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும்போது எந்த விதமான செண்டிமென்ட் மற்றும் எமோஷனல் முடிவும் எடுக்காதீர்கள். தீர விசாரித்து சுயமாக முடிவு எடுங்கள்.

  
சிக்கல் இல்லாத CLAIM:
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது, கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையாக, சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். ஏனெனில் பாலிசி எடுக்கும்போது தரும் தகவல்களில் ஏதாவது தவறு இருந்தால், கிளெய்ம் நிராகரிக்க அல்லது தாமதமாக வாய்ப்புள்ளது.
 டாக்டர் மற்றும் வக்கீலிடம் பொய் சொல்லக் கூடாது என்ற உண்மையை அனைவரும் அறிவர். காப்பீடு செய்பவரிடமும் எந்தப் பொய்யும் சொல்லக் கூடாது. உதாரணத்திற்கு, நீங்கள் 25 வயதில், உங்கள் மருத்துவ அறிக்கைகளை மறைத்து, ஒரு காப்பீட்டில் உங்கள் பணத்தை முதலீடு செய்கிறீர்கள். காப்பீடு காலத்திற்குள் எதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு, நீங்கள் இறந்தால், அதன்பிறகு, காப்பீடு நிறுவனம் மறைக்கப்பட்ட உங்கள் ஆரோக்கியக் குறைபாட்டால் தான் நீங்கள் இறந்தீர்கள் என்பதைக் கண்டுபிடித்தால் உங்கள் காப்பீடு பணம் முழுவதும் பறி போய்விடும். உங்கள் காப்பீட்டை முழுவதுமாகத் தள்ளுபடி செய்து விடுவார்கள். ஆகவே, உங்கள் வயது, ஆரோக்கியக் குறைபாடு, புகைப் பழக்கம், மற்ற காப்பீடு தகவல்கள், உங்கள் மருத்துவப் பின்புலம், போன்றவற்றை மறைக்காமல் பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் காப்பீடு நிறுவனம் உங்கள் மனுவை நிராகரிக்கும் வாய்ப்பைத் தவிர்க்கலாம்.
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எப்படி க்ளெய்ம் செய்ய வேண்டும், அதற்குத் தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்த தகவல்களையும், பாலிசியில் யாரை நாமினியாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதையும் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொள்வது அவசியம். சரியானபடிக்கு கிளெய்ம் செய்தால் சிக்கல் இல்லாமல் இழப்பீடு கிடைக்கும்.
எந்த நிறுவனத்தில் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுப்பது?
நம் நாட்டில் LIC of India என்ற ஒரு பொதுத் துறை காப்பீடு நிறுவனமும் மற்றும் 23 தனியார் நிறுவனங்களும் உள்ளன (SBI Life-ம் PN Paribas என்ற அயல் நாட்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் செயல்படும் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் தான்). இந்த 24 காப்பீட்டு நிறுவனங்களும் IRDAI கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஆகவே இந்த 24 நிறுவனங்களிலும் உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்கும்.
ஆகவே நீங்கள் பாலிசி எடுக்கும் முன்பு கீழ் கண்ட தகவல்களை ஆய்வு செய்து சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள் (காப்பீட்டின் விலைக்கு கடைசி முக்கியத்துவம் கொடுங்கள்).
·         காப்பீட்டு நிறுவனத்தின் சொத்து மதிப்பு (AUM)
·         Claim Settlement Ratio
·         காப்பீட்டு நிறுவனத்தை எளிதில் அனுக கூடிய வாய்ப்பு.
·         காப்பீட்டின் விலை




மேலும் விவரங்களுக்கு:

D. Sendil Kumar,
Pondicherry / Cuddalore.
Mobile -9442327591

எனது மற்ற கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட லிங்க்கு-களை க்ளிக் செய்யவும்.


மானியத்துடன் வீட்டுக் கடன் பெற - பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டம் :




SBI வங்கியில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி:


சிபில் ஸ்கோர் பற்றி தெரிந்துக் கொள்ள :








அன்பு நண்பர்களே,

நான் தற்போது Financial servicing செய்வதுடன், சீ லேண்ட் பேக்கேஜிங்க் என்ற பேப்பர் ப்ளேட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள ரீட்டெய்லர் மற்றும் ஹோல்சேலர்களிடம் இருந்து ஆர்டர்கள் எதிர்பார்கிறேன்.   ஆதரவு தாருங்கள் !!!