To read this article in English, pls. click the following link :
https://sendilfinacialsolution.blogspot.in/2018/04/pradhan-mantri-awas-yojana-pmay-scheme.html
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
இந்தியாவில் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம்தான் “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டமாகும்.
இத்திட்டத்தின் பொது நிபந்தனைகள்:
- இந்தியாவின் எந்த பகுதியிலும் சொந்தமாக வீடு இல்லதவர்கள் மட்டுமே பயன் பெறலாம்.
- பயனாளிகள் தங்கள் பெயரிலோ / குடும்ப அங்கத்தினர் பெயரிலோ சொந்த வீடு இல்லாதவராக இருக்க வேண்டும்.
- குடும்ப அங்கத்தின்ர் என்பது கணவர், மனைவி மற்றும் திருமனமாகாத பிள்ளைகள்
- 18 வயது பூர்த்தியானவர்கள் தங்கள் பெற்றோருக்கு சொந்த வீடு இருந்தாலும், அவர்களுடனே தங்கி இருந்தாலும், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
- பயனாளி 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் சமயத்தில் குடும்ப அங்கத்தினர் அனைவருடைய ஆதார் எண்ணும் பதிவு செய்யப்படும். இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்பது உறுதி செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின்படி திட்ட நிதியில் 35% EWS பிரிவினருக்கான தொகுப்பு வீடு கட்டும் திட்டத்திற்கு ஒதுக்கப்ப்டுகிறது. EWS பிரிவினர் இத்திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு பெறுவதற்க்கு அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி ம்ற்றும் பேரூராட்சி அலுவலகங்களை அனுகி விண்ணப்பித்து பயன் பெறலாம். ஒதுக்கீட்டில் பெண்கள், தழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், மற்றும் இதர பின்தங்கிய வகுப்பினர்களுக்கு முன்னுரிமை உண்டு.
Credit Linked Subsidy Scheme :
தொகுப்பு வீடு திட்டத்தில் பயன்பெற இயலாத மற்ற பிரிவினருக்காக வீட்டுக்கடனுக்கான வட்டியில் மானியச்சலுகை வழங்கும் திட்டம் (Credit Linked Subsidy Scheme - CLSS) செயல்படுத்தப்படுகிறது.
இனி CLSS திட்டத்தை பற்றி விரிவாக காணலாம்:
இடத்திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள, வீடு வாங்க அல்லது ஏற்கனவே உள்ள சொந்த வீட்டில் கூடுதல் கட்டுமான பணிகள் செய்ய வாங்கப்படும் வீட்டுக்கனுக்கான வட்டியில் சலுகை வழங்கப்படும்.
இத்திடத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் பொருளாதார ரீதியாக கீழ்கண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள்
EWS – Ecnomically Weaker Section – பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர்.
ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்க்கு குறைவாக உள்ளவர்கள், 60 சதுர மீட்டர் கார்பெட் ஏரியா அளவுள்ள வீடு கட்டிக்கொள்ளவோ அல்லது தொகுப்பு குடியிருப்பில் ஒரு வீடு வாங்கிக்கொள்ளவோ இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இவ்வீடுகள் அடிப்படை கட்டமைப்பு மற்றும் கழிவறை, தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும். (குறிப்பு - 4 மெட்ரோ சிட்டியில் குடியிருப்போருக்கு 30 சதுர மீட்ட்ர் கார்பெட் ஏரியா அளவு மட்டுமே பொருந்தும்).
LIG – Lower Income Group – குறைந்த வருவாய் உள்ள பிரிவினர் :
ஆண்டு வருமானம் 3 முதல் 6 இலட்சத்திற்க்குள் உள்ளவர்கள், 60 சதுர மீட்டர் கார்பெட் ஏரியா அளவுள்ள வீடு கட்டிக்கொள்ளவோ அல்லது தொகுப்பு குடியிருப்பில் ஒரு வீடு வாங்கிக்கொள்ளவோ இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இவ்வீடுகள் அடிப்படை கட்டமைப்பு மற்றும் கழிவறை, தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
குறிப்பு : வீடு வாங்குவதற்க்கு மட்டும் EWS / LIG பிரிவினர்க்கான பயனாளி பெண்ணாக இருக்க வேண்டும். ஆனால் வீடு கட்டுவதற்க்கு அல்லது கூடுதல் கட்டுமானத்திற்கு இது பொருந்தாது.
MIG I Middle Income Group I – நடுத்தர
வருமானம் உள்ள பிரிவினர்- I :
ஆண்டு வருமானம் 6 முதல்
12 இலட்சத்திற்க்குள்
உள்ளவர்கள், 120 சதுர மீட்டர் கார்பெட் ஏரியா
அளவுள்ள வீடு கட்டிக்கொள்ளவோ அல்லது தொகுப்பு குடியிருப்பில் ஒரு வீடு வாங்கிக்கொள்ளவோ
இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்
MIG II Middle Income Group II – நடுத்தர
வருமானம் உள்ள பிரிவினர்- II :
ஆண்டு வருமானம் 12 முதல்
18 இலட்சத்திற்க்குள்
உள்ளவர்கள், 150 சதுர மீட்டர் கார்பெட் ஏரியா
அளவுள்ள வீடு கட்டிக்கொள்ளவோ அல்லது தொகுப்பு குடியிருப்பில் ஒரு வீடு வாங்கிக்கொள்ளவோ
இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
கார்பெட்
ஏரியா என்றால் என்ன ?
இத்திட்டத்தில் பயன்பெறும் ஒவ்வொரு பிரிவினருக்கும் கார்பெட்
ஏரியா அளவு மாறுபடுகிறது. கார்பெட் ஏரியா என்பது ஒரு கட்டிடத்தின் 4 சுவற்றுக்குள்
மேற்கூரை (சீலிங்) இடப்பட்ட பகுதி ஆகும். சுவற்றின் கனம் (Thickness of the walls) கூட இதில்
பொருந்தாது.
கார்பெட் ஏரியாவுடன், சுவற்றின் கனம் (Thickness of the walls), வெளிப்புர
சுவர்கள், பால்கனி மற்றும் காமன் ஏரியா இவையெல்லம் சேர்த்து பில்ட்-அப் ஏரியா (Built-up Area) எனப்படும்.
பில்ட்-அப் ஏரியா என்பது பொதுவாக கார்பெட் ஏரியாவை விட 30% அளவு கூடுதலாக இருக்கும்.
LIG- வீடு 60 சதுர மீட்டர் கார்பெட் ஏரியா கொண்டதாக இருக்க வேண்டும்
என்றால் பில்ட்-அப் ஏரியா100
சதுர
மீட்டர் வரை இருக்கும். ஒரு சதுர மீட்டர் என்பது 10.7639 சதுர அடி ஆகும். ஆகவே 1000 சதுர அடியில் இரண்டு படுக்கை
அறை கொண்ட வீடு இதன் மூலம் சாத்தியமாகிறது.
குறிப்பு : மேலே குறிப்பிட்டபடி பயனாளி தன் விருப்பபடி எவ்வளவு
பெரிய வீடு வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம், ஆனால் திட்டத்தில் பயன்பெற கார்பெட் ஏரியா,
திட்டத்தில் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். கார்பெட் ஏரியா அளவு திட்டத்தில்
குறிப்பிட்டதை விட அதிகமாக இருந்தால், PMAY
திட்டத்தில்
பயன்பெற முடியாது.
மானிய
தொகை எவ்வளவு? அது எப்படி
வழங்கப்படும்?
EWS
& LIG பிரிவின்ருக்கு
:- வீட்டுக்
கடன் தொகை எவ்வளவாக இருந்தாலும் மானியத்தொகை 20 வருட
காலத்திற்கு 6 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு
6.5%
வட்டி
விகிதத்திற்கு சலுகை வழங்கப்படும்.
உதாரணத்திற்கு ஒருவர் வங்கியில் இத்திட்டத்தின் கீழ் ரூ10
லட்சம்,
9%
வட்டி
விகிதத்தில் 20 வருடங்களுக்கு கடன் பெறுகிறார்
என்றால், ரூ 6 லட்சம்
2.5%
வட்டி
விகிதத்திலும், மீதமுள்ள கடன் தொகை ரூ 4 லட்சம்,
9%
வட்டி
விகிதத்திலும் தவணை செலுத்த வேண்டும்.
கடன் தொகை அனுமதி (sanction) வழங்கியவுடன்,
வங்கியில் மானியத்தொகையை கணக்கிட்டு அசல் தொகையில் இருந்து கழித்துவிட்டு மீதமுள்ள
அசல் தொகைக்கு மட்டுமே மாத தவணை வசூலிக்கப்படும்.
இதுபோலவே MIG I பிரிவினருக்கு
20 வருட
காலத்திற்கு 9 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு
4%
வட்டி
விகிதத்திற்கு சலுகை வழங்கப்படும். MIG II பிரிவினருக்கு
20 வருட
காலத்திற்கு 12 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு 3%
வட்டி
விகிதத்திற்கு சலுகை வழங்கப்படும்.
சலுகைகளை
எங்கே பெறுவது?
அனைத்து வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிலும்
PMAY
– CLSS திட்டத்தின்
கீழ் வட்டித்தொகையில் மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தபட்டுள்ளது.
திட்டத்தின்
கால வரையரை :
MIG I மற்றும் MIG
II பிரிவினருக்கு
01/01/2017-க்கு பின்
மற்றும் 31/03/2019-க்கு முன்பு பெறப்படும்
வீட்டுக்கடன் அனுமதிகளுக்கு (sanctions) மட்டுமே
இத்திட்டம் பொருந்தும்.
EWS / LIG பிரிவினருக்கு 01/01/2017-க்கு பின்
மற்றும் 31/03/2022-க்கு முன்பு பெறப்படும்
வீட்டுக்கடன் அனுமதிகளுக்கு (sanctions) மட்டுமே
இத்திட்டம் பொருந்தும்.
01/01/2017-க்கு பின் வீட்டுக்கடன்
பெற்றவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து நிபந்தனைகளும் பொருந்தும் என்றால், தங்கள்
வங்கியை உடனடியாக அனுகி தங்களை இத்திட்டத்தில் பயன்பெற தேவையான நடவடிக்கை எடுக்குமாறு
கோரவும்.
குறிப்பு
:
01/01/2017-க்கு முன் வீட்டுக்கடன்
வாங்கியவர்கள் மற்றும் சொந்த பணத்தில் வீடு கட்டியவர்கள் இந்தசலுகையை பயன்படுத்த முடியவில்லையே
என்று வருத்தப்பட தேவையில்லை. இவர்களும் பயன்பெற வழி உள்ளது.
PMAY திட்ட நிபந்தனைகளின்படி சொந்த வீடு உள்ள ஒருவர் இத்திடத்தில்
பயன்பெற முடியாது. ஆனால் எற்கனவே உள்ள சொந்த வீட்டில் கூடுதல் கட்டுமானம் கட்டிக்கொள்ள
இத்திட்டத்தில் கீழ் வீட்டுக்கடன் அனுமதி பெற்று சலுகை பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு:
D. Sendil Kumar,
Pondicherry / Cuddalore.
Mobile -9442327591
E-mail : loans.shri@yahoo.com
எனது மற்ற கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட லிங்க்கு-களை க்ளிக் செய்யவும்.
SBI வங்கியில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி:
சிபில் ஸ்கோர் பற்றி தெரிந்துக் கொள்ள :
அன்பு நண்பர்களே,
நான் தற்போது லோன் சர்வீஸிங்க் செய்வதுடன், சீ லேண்ட் பேக்கேஜிங்க் என்ற பேப்பர் ப்ளேட்கள் தயாரிக்கும் நிறுவத்தை நடத்தி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள ரீட்டெய்லர் மற்றும் ஹோல்சேலர்களிடம் இருந்து ஆர்டர்கள் எதிர்பார்கிறேன். ஆதரவு தாருங்கள் !!!















