சிறு குறு தொழில்களுக்கு வங்கிக் கடன் எளிதில் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு, குறு தொழில்கள், வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை. இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன்
பெறுகின்றன என்று அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
வங்கிக்கடன் கிடைக்காததால் தனியார் நிதி நிறுவனங்களை இத்தொழில் செய்வோர் நாடுகின்றனர். அங்கு, அதிக வட்டியில் கடன் பெறுவதால், இத்தொழில்களால் எதிர்பார்த்த வளர்ச்சியை
பெற முடியவில்லை. ஆகவே சிறு, குறு தொழில்
(MSE) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி
முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி
நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக
செயல்படுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு
அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. சிறு, குறு, தொழில்களுக்கு வர்த்தக வங்கிகள் வழங்கும் கடன் தொகையை மறு நிதியாக அந்த வங்கிகளுக்கு முத்ரா வங்கி அளித்துவிடும்.
சுய தொழில் தொடங்குவோருக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்காகப் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் வகைச் செய்கிறது. இளம் தலைமுறையைத் தொழில் முனைவோராக உருவாக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி சுய தொழில் தொடங்க முன் வரும் தொழில் முனைவோர் அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வகைச் செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் பயன் பெற விரும்புவோர், தொடங்கும்
தொழிலுக்கு ஏற்றவாறு 10 லட்சம் வரை கடன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த கடனை பெற எந்தவித
சொத்து பிணையம் (SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. இது முற்றிலும்
குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும்.
புதிதாக தொழில் தொடங்க
விரும்புபவர்கள் மற்றும் ஏற்கனவே தொழில் செய்துகொண்டு அதை மேலும் விரிவு படுத்த
விரும்புபவர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் கடன் பெற்று பயனடையலாம்.
கீழ்கண்ட அனைத்து
தொழில் பிரிவினரும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்:
உற்பத்தி தொழில்.: உதாரணத்திற்கு – மெழுகு வத்தி, தாம்பூல பை,
கிளினிங் பவுடர், டிஷ் வாஷ் பார்,
பேப்பர் பிளேட், பிரியாணி கப்… போன்ற பொருட்கள் உற்பத்தி செய்யும்
நிறுவனங்கள்
வர்த்தக தொழில்: உதாரணத்திற்கு - தள்ளுவண்டி காய்கறி/பழ கடைகள்,
துணி கடைகள், பேக்கரி கடைகள், மளிகை கடைகள், ஹார்ட்வேர்ஸ், ஏஜென்சீஸ், எலக்ட்ரிகல்
கடைகள்… போன்ற வியாபாரம் செய்யும் கடைகள்.
சேவை தொழில்: உதாரணத்திற்கு - சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு,
முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார்
சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், லேத் ஒர்க்ஷாப்,
DTP சென்டர்… போன்ற ஜாப் ஒர்க் செய்யும் தொழில்கள்.
குறிப்பு: பண்ணை தொழில் சார்ந்த மாட்டு பண்ணை,
கோழி பண்ணை, விவசாயம், காலன் வளர்ப்பு, போன்ற தொழில்களுக்கு இந்த திட்டத்தின் கீழ்
கடன் வழங்குவதில்லை. மேலும் சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு, கல்வி கடன்,
தனிநபர் கடன், தனிநபர் வாகன கடன் ஆகியவைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன்
வழங்குவதில்லை.
ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு
அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை
வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. கடன் பணமாக கிடைக்காது. பொருள்,
இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின்
விலைபட்டியல் (Quatation) கொடுக்க வேண்டும். அதனடிப்படையில் வங்கிகள் நேரிடையாக
விற்பனையாளரின் பெயருக்கு காசோலையாக வழங்குவார்கள். Quotation தொகைக்கு குறைந்த
பட்சம் 10% தொழில் முனைவோரின் சொந்த முதலீடாக இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது
வரம்பு - 18 வயது முடிந்திருக்க வேண்டும்.
இதில் கடன்பெற உங்கள் அருகில் உள்ள
வங்கிக்கிளையில் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம். மேலும் PMMY APPLICATION FORM என
இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பட்துடன் - அடையாள சான்று, இருப்பிட சான்று,
அண்மையில் எடுக்கப்பட்ட புகைபடம், உபகரணங்கள், எந்திரங்கள் வாங்குவதற்கு தேவையான
Quotation, மற்றும் விரிவான திட்ட அறிக்கை (Project Report), மற்றும் வங்கி
கிளையால் கேட்கப்படும் இதர ஆவணங்களுடன் சமர்பிக்கவும்.
முக்கிய குறிப்பு : உங்கள் விண்ணப்பத்தை
பரீசீலிக்கும் போது தங்கள் CIBIL Report-ஐ சரி பார்ப்பார்கள். அதில் நீங்கள்
ஏற்கனவே வங்கிகளில் கடன் வாங்கி சரியாக திருப்பி செலுத்தாமல் இருப்பது
தெரியவந்தால் உங்கள் கடன் விண்ணப்பம் உடனே நிராகரிக்கப்படும். சிபில் ரிப்போர்ட்
பற்றிய விவரங்கள் தெரிந்துகொள்ள கீழ்கண்ட லிங்க்க்-ஐ க்ளிக் செய்யவும்.
இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும்
கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே. இந்த வகை
கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கபடும். நீங்கள் வாங்கும் கடனை வங்கி
நிர்ணயிக்கும் மாத தவணையாக (EMI) 5 வருடம்
வரை திருப்பி செலுத்தலாம்.
நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும்
பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது
நடைமுறை மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும்.
ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு
வேண்டுமானாலும் வழங்கலாம். உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு
வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது. அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன்
பெறலாம் (கடன் கொடுக்கும் வங்கிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது). உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே
முயற்சிக்கவும். இந்த கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும்
வங்கிகள் கடன் வழங்கும்.
இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு
தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது
சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய வகைகளில் வழங்கபடுகிறது.
சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை கடன் பெறலாம்.
கிஷோர் (KISHOR) - இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம்.
தருண்(TARUN) - இத்திட்டம்
மூலமாக ஐந்து
லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.
உங்கள் தொழில் கடன் விண்ணப்பத்தில்
கொடுக்கப்பட்ட விவரங்கள் மற்றும் தங்களுடனான நேர்காணல் மற்றும் கள ஆய்வு செய்த
பிறகு மேற்கண்ட திட்டத்தில் எந்த திட்டத்தில், எவ்வளவு கடன் தொகை வழங்குவது என்பதை
வங்கி கிளை மேலாளர் முடிவு செய்வார். முத்ரா கடன் திட்டத்தை பொறுத்தவரை கிளை
மேலாளரின் முடிவே இறுதியானது.
ஆகவே நீங்கள் மேலாளரை சந்திக்கும்போது எந்த
தொழிலுக்காக கடன் தேவைப்படுகிறது. அந்த தொழிலில் உங்களுக்கு எவ்வளவு அனுபவம்
இருக்கிறது. புதிதாக தொழில் தொடங்குபவராக இருந்தால் எப்படி, எதற்காக இந்த தொழிலை
தேர்ந்தெடுத்தீர்கள், இந்த தொழிலுக்கு எவ்வளவு கடன் தொகை தேவைப்படுகிறது, கடன்
தொகையை எவ்வாறு பயன்படுத்தப்போகிறீர்கள் என்ற சரியான விளக்கத்துடன் திட்ட அறிக்கை
ஒன்றை தயாரித்து உடன் வைத்திருங்கள்.
(குறைந்த கட்டணத்தில் திட்ட அறிக்கை
தயாரித்து கொடுக்க எனது Whatsup 9442327591 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.)
முத்ரா கடன் திட்டத்தை பொறுத்தவரை கிளை
மேலாளரின் முடிவே இறுதியானது. ஆனால், பொதுவாக வங்கி மேலாளர் தங்கள் கடன் கோரிக்கை
மீது ஆர்வம் காட்ட மாட்டார், ஏனென்றால் அவர் தன்னுடைய வேலை பலுவிற்கிடையே
தங்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்ய தங்கள் உற்றார் உறவினரோ அல்லது தங்கள் மீது
அக்கறை கொண்டவரோ அல்ல. அவர் திருப்தியடையும்படி செய்யப்போகும் தொழிலில் தங்களுடைய
அறிவு & அனுபவத்தை வெளிப்படுத்துங்கள். தங்கு தடையின்றி கடன் தொகையை திருப்பி
செலுத்தும் அளவிற்கு இந்த தொழிலில் நல்ல லாபத்துடன் வருமானம் ஈட்ட முடியும் என்பதை
உற்சாகமாக தெரியப்படுத்துங்கள். ஒரு முறைக்கு பல முறை மேலாளரை சந்திக்கும்
சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு அவரிடம் கடன் சம்பந்தமான கொரிக்கையை தொடர்ந்து வையுங்கள்.
இவர் சரிப்பட்டு வரவில்லை என்றால் உங்கள் ஊரிலுள்ள மற்றொரு வங்கியை அனுகுங்கள். இப்படி பட்டியலில் உள்ள அனைத்து வங்கிகளிலும் முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
வாழ்த்துக்கள்.
உங்கள் கடன் விண்ணப்பத்தை கிளை மேலாளர் நிராகரிக்கும் பட்சத்தில், அவர் அப்படி நிராகரிக்க சொல்லும் காரணங்கள் நியாயமானதாக இல்லை என்றால், தாங்கள் அந்த வங்கியின் மேல் அதிகாரியிடமோ அல்லது https://www.mudra.org.in/Default/DownloadFile/Nodal-Officers-MUDRA.pdf என்ற லிங்க்-இல் இருந்து Nodal officers list டவுன்லோடு செய்து தங்கள் மாவட்ட அதிகாரியிடம் புகார் தெரிவிக்கவும்.
பொதுவாக மேலாளர்கள் சொல்வது “எற்கனவே இந்த கிளையில் முத்ரா திட்டத்தில் கடன் வாங்கியவர்கள் திரும்ப செலுத்தவில்லை,
ஆகவே இத்திட்டத்தின் கீழ் கடன் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.” இது தவறான தகவல். நீங்கள் உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.
ஏற்கனவே தொழில் செய்பவர்கள் அபிவிருத்தி கடனுக்கு
கோரிக்கை வைக்கும்போது அவர்களிடம் - “GST ரிட்டர்ன்
மற்றும் IT ரிட்டர்ன் இருந்தால் மட்டுமே கடன் விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியும்” என்று தெரிவிப்பார்கள். பொதுவாக குறு தொழிலுக்கு இரண்டுமே தேவைப்படாது.
(பொதுவாக
ஆண்டுக்கு ரூ40 லட்சம் வரை தமிழகத்திற்குள் வரவு செலவு (Turnover) செய்பவர்கள் GST
பதிய தேவையில்லை. எந்த விதமான ஆவனங்களும் maintain பண்ண தேவையில்லை. வெறும் கேஷ் பில்
மட்டுமே போடலாம். மற்றும் அனைத்து தொழில் தொடர்பான செலவுகளுக்கு பிறகு உங்கள் ஆண்டு
வருமானம் ரூ.2,50,000/- மேற்கொண்டு இருந்தால் IT ரிட்டர்ன்ஸ் தேவைப்பட்டால் file செய்து
சமர்பிக்கவும்.)
(பொதுவாக முத்ரா திட்டத்தில் கடன் பெறுபவர் கடன்
தொகை செலுத்த தவறிவிட்டால், மத்திய அரசின் CGTMSE என்ற இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம்
வாரா கடன் நிலுவைத்தொகையில் 85% தொகை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அளிக்கப்படும். இதனால்
வங்கிகள் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். ஆகவே இந்த திட்டத்தில் அதிக கெடுபிடி
இன்றி கடன் வழங்க வங்கிகள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அப்படி கடன் திரும்ப
செலுத்த தவறும் நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் வாழ்நாள் முழுதும்
வங்கிகளில் கடன் வாங்க இயலாது. தங்களது பிள்ளைகளின் கல்விக்கடனில் நீங்கள் கூட்டு விண்ணப்பதாரராகும்
போது தங்கள் பிள்ளைகளின் கல்வி கடன் விண்ணப்பம் கூட நிராகரிக்கப்படும். அகவே எப்போதும்
கடனை செலுத்தி முடிக்க வேண்டும் என்ற முனைப்போடு இருங்கள்.)
கடன் வழங்கும் வங்கிகள்:
• 27 Public Sector Banks
• 17 Private Sector Banks
• 31 Regional Rural Banks (RRBs)
• 4 Co-operative Banks
• 36 Micro Finance Institutions (MFIs)
• 25 Non Banking Financial Companies (NBFCs)
• 17 Private Sector Banks
• 31 Regional Rural Banks (RRBs)
• 4 Co-operative Banks
• 36 Micro Finance Institutions (MFIs)
• 25 Non Banking Financial Companies (NBFCs)
Public Sector Banks
1 State
Bank of India
2 State Bank of Bikaner & Jaipur
3 State Bank of Travancore
4 Bank of Baroda
5 Bank of India
6 Bank of Maharastra
7 Canara Bank
8 Corporation Bank
9 Dena Bank
10 IDBI Bank Ltd.
11 Indian Bank
12 Oriental Bank of Commerce
13 Punjab National Bank
14 Syndicate Bank
15 UCO Bank
16 Union Bank of India
17 Vijaya Bank
18 Allahabad Bank
19 Andhra Bank
20 Bhartiya Mahila Bank
21 Central Bank of India
22 Indian Overseas Bank
23 Punjab & Sind Bank
24 State Bank of Hyderabad.
25 State Bank of Mysore
26 State Bank of Patiala
27 United Bank of India
2 State Bank of Bikaner & Jaipur
3 State Bank of Travancore
4 Bank of Baroda
5 Bank of India
6 Bank of Maharastra
7 Canara Bank
8 Corporation Bank
9 Dena Bank
10 IDBI Bank Ltd.
11 Indian Bank
12 Oriental Bank of Commerce
13 Punjab National Bank
14 Syndicate Bank
15 UCO Bank
16 Union Bank of India
17 Vijaya Bank
18 Allahabad Bank
19 Andhra Bank
20 Bhartiya Mahila Bank
21 Central Bank of India
22 Indian Overseas Bank
23 Punjab & Sind Bank
24 State Bank of Hyderabad.
25 State Bank of Mysore
26 State Bank of Patiala
27 United Bank of India
Private Sector Banks
1 Axis
Bank Ltd.
2 Catholic Syrian Bank Ltd.
3 City Union Bank Ltd.
4 DCB Bank Ltd.
5 Federal Bank Ltd.
6 HDFC Bank Ltd.
7 ICICI Bank Ltd.
8 Indus Ind Bank Ltd.
9 Jammu & Kashmir Bank Ltd.
10 Karnataka Bank Ltd.
11 Karur Vysya Bank Ltd.
12 Kotak Mahindra Bank Ltd.
13 Nainital Bank Ltd.
14 South Indian Bank
15 Tamilnad Mercantile Bank Ltd.
16 The Ratnakar Bank Ltd.
17 Yes Bank Ltd.
2 Catholic Syrian Bank Ltd.
3 City Union Bank Ltd.
4 DCB Bank Ltd.
5 Federal Bank Ltd.
6 HDFC Bank Ltd.
7 ICICI Bank Ltd.
8 Indus Ind Bank Ltd.
9 Jammu & Kashmir Bank Ltd.
10 Karnataka Bank Ltd.
11 Karur Vysya Bank Ltd.
12 Kotak Mahindra Bank Ltd.
13 Nainital Bank Ltd.
14 South Indian Bank
15 Tamilnad Mercantile Bank Ltd.
16 The Ratnakar Bank Ltd.
17 Yes Bank Ltd.
நன்றி,
இந்த
கட்டுரை பற்றிய தங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கமெண்ட் பாக்ஸில் தவறாமல்
பதிவிடவும்.
முத்ரா
கடன் திட்டத்தில் கடன் வாங்க நீங்களே நேரடியாக வங்கியில் அனுகவும். மேலும் இத்திட்டம் தொடர்பாக என்னுடைய அலைபேசி எண்ணை
தொட்ர்பு கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை
கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். நிச்சயம் நேரம் கிடைக்கும் போது பதில் பதிவிடுகிறேன்.
(குறைந்த கட்டணத்தில் திட்ட அறிக்கை தயாரித்து கொடுக்க மட்டும்
எனது Whatsup 9442327591 என்ற எண்ணிற்கு Whatsup செய்யவும், Call செய்ய வேண்டாம்)
அனைத்து விதமான கடன் தேவைகள், இன்ஷூரன்ஸ் சேவை தொடர்பான தேவைகளுக்கு
புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும்
அழைக்கவும்.
Thanks and regards,
Sendil kumar D,
9442327591.
எனது மற்ற கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட லிங்க்கு-களை க்ளிக் செய்யவும்:
சிபில் ஸ்கோர் பற்றி தெரிந்துக் கொள்ள :
SBI வங்கியில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி:
மானியத்துடன் வீட்டுக் கடன் பெற - பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டம் :
http://sendilsbihomeloan.blogspot.com/2018/04/blog-post.html
கூடுதல் கடன் தொகை பெறுவது எப்படி.
http://sendilsbihomeloan.blogspot.com/2017/04/blog-post.html
அன்பு நண்பர்களே,
நான் தற்போது Financial Servicing செய்வதுடன், சீ லேண்ட் பேக்கேஜிங்க் என்ற பேப்பர் ப்ளேட்கள் தயாரிக்கும் நிறுவத்தை நடத்தி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள ரீட்டெய்லர் மற்றும் ஹோல்சேலர்களிடம் இருந்து ஆர்டர்கள் எதிர்பார்கிறேன். ஆதரவு தாருங்கள் !!!
(குறைந்த கட்டணத்தில் திட்ட அறிக்கை தயாரித்து கொடுக்க மட்டும்
எனது Whatsup 9442327591 என்ற எண்ணிற்கு Whatsup செய்யவும், Call செய்ய வேண்டாம்)
அனைத்து விதமான கடன் தேவைகள், இன்ஷூரன்ஸ் சேவை தொடர்பான தேவைகளுக்கு
புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும்
அழைக்கவும்.
Sendil kumar D,
9442327591.
எனது மற்ற கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட லிங்க்கு-களை க்ளிக் செய்யவும்:
சிபில் ஸ்கோர் பற்றி தெரிந்துக் கொள்ள :
SBI வங்கியில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி:
மானியத்துடன் வீட்டுக் கடன் பெற - பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டம் :
http://sendilsbihomeloan.blogspot.com/2018/04/blog-post.html
கூடுதல் கடன் தொகை பெறுவது எப்படி.
http://sendilsbihomeloan.blogspot.com/2017/04/blog-post.html
கூடுதல் கடன் தொகை பெறுவது எப்படி.
http://sendilsbihomeloan.blogspot.com/2017/04/blog-post.html

























