Saturday, 10 June 2017

சிபில் ஸ்கோர் பற்றிய சில குறிப்புகள் - A Small note about CIBIL Score

சிபில் ஸ்கோர் (CIBIL Score) பற்றிய சில குறிப்புகள் :
















To read this blog in English please click the link given below:


Credit Information Bureau of India Limited என்பதன் சுருக்கமே CIBIL ஆகும்.
சிபில் நிறுவனம் ரிசர்வ் வங்கியால் அங்கிகரிக்கப்பட்ட் கடன் பற்றிய தகவல்களை அளிக்கும் நிறுவனம். (தற்போது இந்நிறுவ்னத்தின் பெயர் CIBIL Transunion என்று மாற்ற்ப்ப்ட்டுள்ளது)

அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரின் கடன் கணக்குகள் பற்றிய தகல்வல்களை அவ்வபோது சிபில் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வார்கள்.
தங்களிடம் இருக்கும் வாடிக்கையாளரின் கடன் பற்றிய தகவல்களைக் கொண்டு சிபில் நிறுவனம் கடன் மதிப்பீடு அளிக்கிறது, இதுவே சிபில் ஸ்கோர் (CIBIL Score) எனப்படுகிறது.

வாடிக்கையாளரின் கடன் திரும்ப செலுத்தும் முறையை (Repayment behavior) கணக்கிட்டு அவர்களுக்கு 300 முதல் 900 வரை கடன் மதிப்பீடு அளிக்கப்படுகிறது. 




பொதுவாக சிபில் ஸ்கோர் 750 க்கு மேல் இருந்தால் நல்ல ஸ்கோராக கருதப்படும். மேலே உள்ள படத்தில் 700 க்கு மேல் பச்சை நிறத்திலும் 700 க்கு கீழ் சிவப்பு வண்ணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 700 க்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் கடன் அதிக ரிஸ்க் என்றும் 700 க்கு மேல் குறைவான ரிஸ்க் என்றும் கருதப்படுகிறது.

அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நமது கடன் விண்ணப்பத்தை பரீசீலனை செய்யும் முன் சிபில் அறிக்கை மற்றும் ஸ்கோரை (CIBIL Report and Score) சரி பார்ப்பார்கள். இதில் நாம் முன்பு வாங்கிய கடன்கள் அதை திருப்பி செலுத்திய முறை. ஏற்கனவே வாங்கிய கடன் சரிவர திரும்ப செலுத்தாமல் நிலுவைத்தொகை இருப்பின் அது பற்றிய தகவல், இவை அனைத்தும் சிபில் ரிப்போர்ட் மூலம் தெரிய வரும். ஒரு வங்கியில் கடன் பெற்று சரியாக திரும்ப செலுத்தாமல், மற்றொரு வங்கியை அனுகி கடன் பெறுவது இப்போது சாத்தியமில்லாத விஷயம்.

சிபில் ஸ்கோர் குறைவதற்க்கான காரணங்கள்:

மாத தவணை திரும்ப செலுத்தும் முறை : மாத தவணையை குறிப்பிட்ட் தேதியில் செலுத்த வேண்டும். அப்படி தவறினால் அந்த மாத கடைசி தேதிக்குள் வங்கியிலோ அல்லது அங்கிகரீக்கப்பட்ட முகவரிடமோ செலுத்தி ரசீது பெற்ற்க்கொள்ள வேண்டும். 3 நாட்கள் கழித்து அந்த ரசீதை வைத்து வங்கியையோ அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தையோ தொடர்பு கொண்டு நீங்கள் செலுத்திய பணம் உங்கள் கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டதா என்பதை சரி பார்த்துக்கொள்ளவும்.

தொடர்ந்து 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் பாக்கி வைத்து தவணை செலுத்தி வந்தால் உங்கள் சிபில் ஸ்கோர் குறைந்துவிடும்.

உதாரணம் 1 : ஒருவர் நிதி சிக்கல் காரணமாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மாத தவணை செலுத்த தவறிவிட்டார், பிறகு ஏப்ரல் மாதத்தில் இருந்து தவறாமல் தவணை செலுத்தி வந்து கடன் கால முடிவில் மூன்று மாத நிலுவை தவணை தொகை செலுத்தி கடனை முடிக்கிறார். இவரது சிபில் ஸ்கோர் பெருமளவு குறைந்திருக்கும், காரணம் ஏப்ரல் மாதத்தில் இவர் செலுத்திய தவணைத்தொகை ஜனவரி மாத தவணையாக வரவு வைக்கப்படும். ஆகவே இவர் கடன் முடியும் காலம் வரை 90 நாட்கள் கழித்து தவணை செலுத்துபவர் ஆகிறார்.
உதாரணம் 2 : ஒருவர் 36 மாத தவணைக்கு கடன் பெற்றிருப்பார். கடைசி மாத தவணை செலுத்த மறந்திருப்பார். பிறகு கடன் கணக்கு முடிந்த்துவிட்டது என்று கருதி இருப்பார். வங்கியும் மிக குறைந்த நிலுவைத்தொகையாக இருப்பதால் பொருட்படுத்தாமல் விட்டிருப்பார்கள். இவர் 2 வருடத்திற்கு பிறகு வேறு கடனுக்கு விண்ணப்பித்தால் இவரது சிபில் ஸ்கோர் வெகுவாக குறைந்திருக்கும். 240 DPD காட்டும். குறைந்த கடன் தொகைக்கு வாங்கும் ஏசி. வாஷிங் மிஷின், கம்ப்யூட்டர், இரு சக்கர வாகன கடன் போன்ற கடன்களில் இப்படி நடக்க வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. கடன் முடிந்ததும் கடன் கொடுக்கும் நிறுவனத்திடம் NOC வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

இரு சக்கர வாகனம், நாங்கு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களுக்கு வாங்கும் கடனை முடித்த பின், கடன் கொடுக்கும் நிறுவனத்திடம் NOC வாங்கி RTO அலுவலகத்தில் கொடுத்து உங்கள் RC புத்த்கத்தில் Hypothecation cancel செய்ய வேண்டும்.

Overdraft / Cashcredit : OD / CC கணக்கு வைத்திருப்பவர்கள் கடன் தொகைக்கான வட்டி தொகை மாதாமாதம் வங்கியில் பிடித்தம் செய்ய தேவையான balance வைத்திருக்க வேண்டும். மாதாமாதம் வட்டி செலுத்த தவறினால், சிபில் ஸ்கோர் குறைந்துவிடும்.

நகைக் கடன் : நகைக் கடன் வாங்கினால் வங்கியுடனான ஒப்பந்தப்படி 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ கடன் தொகை செலுத்தி நகையை திருப்பவோ அல்லது மறு அடகு வைக்க வேண்டும். வங்கியின் நிபந்தனைப்படி உரிய காலத்தில் வட்டி செலுத்த வேண்டும். தவறினால் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.

கடன் அட்டை (க்ரெடிட் கார்டு) : கடன் அட்டை பயன்படுத்துபவர்கள் பில்லில் குறிப்பிட்டிருக்கும் தவனை தேதிக்குள் மொத்த தொகையையும் (Total amount due) செலுத்திவிட வேண்டும். அப்படி செலுத்த முடிந்த தொகை மட்டுமே கடன் அட்டையிலிருந்து செலவு செய்ய வேண்டும். அப்படி முழு தொகை செலுத்த முடியாத பட்சத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு மாத தவணையாக மாற்றிக்கொள்ளவும்.

எக்காரணத்தைக் கொண்டும் குறைந்த பட்ச தொகை (Minimum Amount Due) மட்டும் செலுத்தி கடனை நீடிக்காதீர்க.ள். இதை Cash Rotation என்று சொல்லுவார்கள் இதனால் உங்கள் ஸ்கோர் வெகுவாக பாதிக்கும். மேலும் இந்த கேஷ் ரொட்டேஷன் தொகைக்கு 48% முதல் 60% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. கவனம் தேவை.

அதிக பிணை இல்லா கடன்கள் (Un-secured loans) : தனி நபர் கடன் மற்றும் கடன் அட்டை (personal loan & credit cards) ஆகியவை பிணையில்லா கடங்கள் ஆகும். அதிக அளவில் இது போன்ற கடன்கள் வாங்குவது உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கும். ஆகவே வாகனகடன், வீட்டுக்கடன் போன்ற பிணையுடன் கூடிய கடன்கள் (Secured Loans) வாங்குவது உங்கள் ஸ்கோரை பாதிக்காது.

அதிக அளவு கடன் விண்ணப்பங்கள் : ஒரு நிதி நிறுவனத்திலோ அல்லது வங்கியிலோ கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணத்தை தெரிந்துக்கொண்டு அதை சரி செய்துவிட்டு மறுபடி அதே வங்கியிலோ அல்லது வேறு வங்கியிலோ விண்ணப்பிக்கலாம். அப்படி செய்யாமல் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் விண்ணப்பித்து பல இடங்களில் நிராகரிக்கப்பட்டால், உங்கள் சிபில் ஸ்கோர் வெகுவாக பாதிக்கப்படும். சிலர் ஒரே சமயத்தில் 4 அல்லது 5 வங்கிகளில் விண்ணப்பிப்பார்கள், இதனாலும் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.
சில சிபில் ரிப்போர்ட்டில் பின் வரும் குறியீடுகள் காணப்படும். இவைகளால் சிபில் ஸ்கோர் வெகுவாக பாதிப்படையும் மற்றும் உங்கள் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் - Settled, Writtenoff, Post Writtenoff Settled, Suit Filed, SUB, SMA.

சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்:
கடன் முழுவதுமாக செலுத்தாமல் இருப்பின் அந்த வங்கியை அனுகி கடன் கணக்கை முழுவதுமாக பாக்கி செலுத்தி முடித்துவிட்டு NOC பெற்றுக்கொள்ளவும். முடிந்தவரை தள்ளுபடி இல்லாமல் கடனை முடிக்க வேண்டும். குறிப்பாக அசல் (principle) தொகையில் தள்ளுபடி இல்லாமல் முடிக்கவும். (கடன் அட்டைக்கு இது பொருந்தாது, முடிந்தவரை அசல் தொகையிலும் தள்ளுபடி வாங்கி செட்டில் செய்யலாம்)

ஏசி, வாஷிங் மிஷின், டிவி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் மாத தவணையில் வாங்கி தவறாமல் தவணை செலுத்துவதன் மூலம் நம் சிபில் ஸ்கோரை முன்னேர செய்யலாம். இது போன்ற பொருட்களுக்கு கடன் கொடுக்க சிபில் ஸ்கோர் பார்க்கமாட்டார்கள். மேலும் கடன் தொகை உடனே அனுமதி (sanction) தருவார்கள்.

சிபில் ஸ்கோர் தெரிந்துகொள்வது எப்படி : வங்கிகளில் கடன் விண்ணப்பம் சமர்பிக்கும் முன்பு நமது சிபில் ஸ்கோரை சரி பார்த்துக்கொள்வது நல்லது. சிபில் நிறுவன வளை தளம் இதற்க்கான வாய்ப்பை நமக்கு அளிக்கிறது.

வருடத்தில் ஒரு முறை நம் சிபில் ஸ்கொர் மற்றூம் அறிக்கையை நாம் இலவசமாக பெறலாம். அதற்க்கு கீழ்கண்ட லிங்க்-ஐ க்லிக் செய்யவும். வளை தளத்திற்கு செல்லும் முன் உங்கள் பான் அட்டை மற்றூம் கடைசியாக கடன் வாங்கிய கடன் தொகை, வங்கி பொன்ற தகவல்களை சரி பார்த்து வைத்துக்கொள்ளவும். தகவல்களை சரியாக உள்ளீடு செய்தால் உடண்டியாக உங்கள் ஈமெயிலுக்கு ரிப்போர்ட் அனுப்பபடும். தவறாக உள்ளீடு செய்தால் நீங்கள் உங்கள் அடையாள மற்றூம் முகவரிச்சான்று ஸ்கேன் செய்து பதிவேற்றவேண்டும். அந்த முகவரிக்கு ரிப்பொர்ட் அனுப்பிவைக்கப்படும்

இலவச சிபில் ஸ்கோர் மற்றூம் ரிப்போர்ட் பெற கீழ்கண்ட லிங்க்-ஐ க்லிக் செய்யவும்.


இலவச சலுகையை பயன்படுத்திய பிறகு கட்டண சேவையை பயன்படுத்தலாம்.  ஒருமுறை ரூ.550/- செலுத்தி சிபில் ஸ்கொர் ம்ற்றும் அறிக்கை பெற்றூக்கொள்ளலாம். ரூ.800/- செலுத்தி வருடத்தில் இரண்டு முறையும், ரூ1,200/- செலுத்தி வருடத்தில் நாங்கு முறையும் சிபில் ஸ்கொர் ம்ற்றும் அறிக்கை பெற்றூக்கொள்ளலாம். கட்டணம் செலுத்தி சிபில் ஸ்கொர் ம்ற்றும் அறிக்கை பெற கீழ்கண்ட லிங்க்-ஐ க்லிக் செய்யவும்.

https://www.cibil.com/creditscore/

இந்த கட்டுரையை படித்தவர்கள் தவறாமல் தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

மேலும் விவரங்களுக்கு:
D. Sendil Kumar,
Financial Consultant
Pondicherry / Cuddalore.
Mobile -9442327591
E-mail : loans.shri@yahoo.com


எனது மற்ற கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட லிங்க்கு-களை க்ளிக் செய்யவும்.

SBI வங்கியில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி:

மானியத்துடன் வீட்டுக் கடன் பெற - பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டம் :











































அன்பு நண்பர்களே,
நான் தற்போது லோன் சர்வீஸிங்க் செய்வதுடன், சீ லேண்ட் பேக்கேஜிங்க் என்ற பேப்பர் ப்ளேட்கள் தயாரிக்கும் நிறுவத்தை நடத்தி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள ரீட்டெய்லர் மற்றும் ஹோல்சேலர்களிடம் இருந்து ஆர்டர்கள் எதிர்பார்கிறேன்.   ஆதரவு தாருங்கள் !!!  

   

Tuesday, 18 April 2017

கூடுதல் கடன் தொகை பெறுவது எப்படி?



நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக் கடனை நம்பியே வீடு வாங்கும் திட்டத்தில் இருப்போம். என்னதான் சேமிப்பு இருந்தாலும், வீட்டுக் கடன்தான் நம் கனவு கவிழ்ந்துவிடாமல் கரை சேர்க்க உதவும். மனை வாங்கி வீடு கட்டுவதாக இருந்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குவதாக இருந்தாலும் நடுத்தர மக்கள் பெரும்பாலானோரின் நிலை இதுதான். இன்றைய பொருளாதார சூழலில் நம் சேமிப்பை மட்டும் நம்பி நம் கனவை நனவாக்க நினைப்பது கஷ்டத்தில் கொண்டுபோய்த் தள்ளிவிடும். நம் சேமிப்பு ஆரம்பத் தொகைக்கு மட்டுமே பயன்படும். உதாரணமாகச் சிலர் மனையை மட்டும் தங்கள் சேமிப்பைக் கொண்டு வாங்குவார்கள். வீடு கட்ட வங்கிக் கடனைச் சார்ந்திருப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க இருப்பவர்கள் ஆரம்பத் தொகைக்குச் சேமிப்பைப் பயன்படுத்துவார்கள்.
வீட்டுக் கடனைப் பொறுத்தவரை நாம் கட்டப் போகும், வாங்கப் போகும் வீட்டின் மதிப்பில் சுமார் 80 சதவிகிதத் தொகையைக் கடனாகத் தருவார்கள். மீதித் தொகைக்குத்தான் நம் சேமிப்பு பயன்படும். இந்தத் தொகை உறுதியாக உங்கள் சேமிப்பாக இருந்தால் நலம். இதற்கும் கடன் வாங்க நேரிட்டால் கடும் சிரமத்திற்கு உள்ளாகிவிடும். வங்கி தரும் கடன் தொகை எவ்வளவு இருக்கும் என்பது நமது திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டது. குடும்பச் செலவு போக நம் மாத வருமானம் எவ்வளவு எனக் கணக்கிட்டு நமது திருப்பிச் செலுத்தக்கூடிய தகுதியைக் கணக்கிடுகிறார்கள். இந்த இடத்தில்தான் நாம் திட்டமிட்ட தொகை கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பார்ப்போம். 
வீட்டுக்கடன் வாங்க வங்கியை அனுகும் முன் நாம் சில திட்டமிடல்களை செய்ய வேண்டும். பொதுவாக நம் மாத நிகர வருமானத்தில் 50% சதவிகித தொகையைத்தான் மாத தவணையாக செலுத்தமுடியும். இது ஏற்கனவே நாம் செலுதிக்கொண்டிருக்கும் தவணை மற்றும் இப்போது பெற பொகும் வீட்டுக்கடனுக்கன தவணை தொகையும் அடங்கும்.
இதை வைத்து தான் வங்கியில் உங்கள் திருப்பி செலுத்தும் திறனை கண்க்கிடுகிறார்கள்.  உங்கள் திரும்ப செலுத்தும் திறனை  வைத்து தான் உங்கள் கடன் தொகை வங்கியால் நிர்ணயிக்கப்படுகிறது. 
கீழ்க்கண்ட வகையில் உங்கள் திரும்ப செலுத்தும் திறனை (Repayment Capability) அதிகப்படுத்திக்கொள்ளலாம் :
1. சிறிய கடன்களை அடைப்பது :
பொதுவாக வீட்டுக்கடன் 10 வருடத்திற்க்கு மேற்கொண்ட நீண்ட கால கடனாக அதிக தொகை வழங்கப்படும். ஆகவே நாம் ஏற்கனவே வைத்திருக்கும் சிறிய கடன்களை அடைப்பதால் நம் திருப்பி செலுத்தும் திறன் அதிகரிக்கும், 
தனி நபர் கடன், இரண்டு சக்கர வாகன கடன், இதர வாகன கடன், சிறிய தொழில் கடன் போன்றவற்றை அடைப்பதால் நம் திருப்பி செலுத்தும் திறன் அதிகரிக்கும், 
2. கடன் திரும்ப செலுத்தும் காலத்தை அதிகரிப்பது :
உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம். நீங்கள் எதிர்பார்த்த வீட்டுக் கடன் கிடைக்கவில்லையென்றால், திரும்பச் செலுத்தும் வீட்டுக் கடனின் கால அளவை அதிகரிக்கலாம். அதாவது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் தொகை ரூ.10 ஆயிரம், இதை 10 ஆண்டுகளில் திரும்ப செலுத்துகிறீர்கள் எனில் உங்களுக்குக் குறைந்த அளவே கடன் கிடைக்கும். அப்போது இதே ரூ.10 ஆயிரம் தொகையை நீங்கள் 20 ஆண்டுகளில் செலுத்தினால் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ப கடன் தொகையும் கூடும். எதிர்பார்க்கும் கடன் கிடைக்கும்.
இப்படி வீட்டுக் கடனைக் கட்டும் ஆண்டுகளை அதிகரிக்கும்போது, வட்டிக்குச் செல்லும் தொகை அதிகரிக்கும். இந்த வட்டிச் செலவைக் குறைக்க, வரும் ஆண்டுகளில் இடையிடையே மாத தவணை போகக் கூடுதல் தொகையை (போனஸ், இதர வரவுகளைக் கொண்டு) கட்டி, கடன் பாக்கியைக் குறைத்துக் கொள்ளலாம்.
3. குடும்ப உறுப்பினர்களை கூட்டு விண்ணப்பதாரராக சேர்ப்பது :
கூடுதல் கடன் தொகை பெறுவதற்கு வருமானம் உள்ள ரத்த சம்பந்தம் உள்ள சொந்தங்களை (Blood Relatives) கூட்டு விண்ணப்பதாரராக சேர்க்கலாம். 
கணவன், மனைவி, அப்பா, அம்மா, மகன், மகள், சகோதரன், திருமணமாகாத சகோதரி ஆகியோர் மட்டுமே கூட்டு விண்ணப்பதாரராக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
திருப்பி செலுத்தும் திறன் கணக்கிடப்படும்போது கூட்டு விண்ண்ப்பதாரரின் வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதனால் கூடுதல் தொகை கடனாக பெறலாம்.
4. வாடகை, விவசாயம், மற்றும் இதர வருமானத்துக்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பது:
மாத சம்பளம் வாங்குபவர்கள் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் கொடுக்கும் Form 16 ஐ, ஆடிட்டரிடம் கொடுத்து, அதனுடன் இதர வருமானத்திற்க்கான சான்றிதழ்களை சமர்பித்து IT Filing செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் கணக்கில் காட்டலாம். ஃபைல் செய்யப்பட்ட ஐடி ரிட்டன்சை வங்கியில் சமர்ப்பித்து கூடுதல் கடன் தொகை பெறலாம்.
தொழில் செய்வோரும்  வருடாந்திர ஐடி ஃபைலிங்க் போது ஆடிட்டரிடம் ஆலோசித்து  கூடுதல் வருமானத்தை கணக்கில் கொண்டு வருவதன் மூலம் கூடுதல் கடன் தொகை பெறுவதற்க்கான வாய்ப்பை உருவாக்கிகொள்ளலாம். நிதி திட்டமிடலே இதற்க்கு முக்கியமானது.
மேலும் நிதி திட்டமிடல் பற்றி தெரிந்துக் கொள்ள எனது அலைபேசி எண்- 9442327591ஐ அழைக்கவும்.


மேலும் விவரங்களுக்கு:
D. Sendil Kumar,
Financial Cosultant
Pondicherry / Cuddalore.
Mobile -9442327591







Monday, 27 March 2017

மற்ற வங்கிகளில் உள்ள வீட்டுக் கடனை SBI க்கு மாற்றுவதால் லாபம் உண்டா?

08/04/2018 அன்று update செய்யப்பட்டது

D. செந்தில்குமார்  - Financial Consulatant - 9442327591


நீங்கள் முதலில் வீட்டுக் கடனை வாங்கிய வங்கியிலிருந்து SBI  வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றிக்கொள்வது இப்போது மிக எளிதான விஷயம். வங்கிக்கு வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. சிறிய வேறுபாடுகளாக இருந்தாலும் பயனாளருக்கு அது மிகப் பெரிய விஷயம்தான்.


20 லட்சம் - 25 ஆண்டுகளுக்கு கடன் பெற்ற ஒருவர் - அரை சதவீதம் 0.5% குறைவான வட்டி விகிதத்துக்கு மாறும் பொழுது அவருக்கு மாதத்திற்க்கு ரூ.685/- மிச்சமாகிறது. ஆக 25 ஆண்டுகளுக்கு ரூ.1,87,500/- மிச்சமாகிறது.


sbi-யில் மற்ற வங்கியிலிருந்து மாற்றிக்கொள்ளும் வீட்டுக்கடனுக்கு பரீசீலனைக்கட்டணம் கிடையாது (0 Processing fees for Home Loan Takeover form other banks).


ஆகவே எனது கருத்து என்னவென்றல் - உங்கள் கடன்  திரும்ப செலுத்தும் நிலுவை காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் SBI-யை விட 0.5% அதிக வட்டி விகிதத்தில் உள்ளவர்கள் தங்கள் கடனை SBI-க்கு  மாற்றிக்கொள்வது லாபகரமானது.


வீட்டுக்கடனை ஒரு வங்கியிலிருந்து SBI  வங்கிக்கு மாற்ற, முதலில் கடன் பெற்ற வங்கியிடம் உங்கள் கடன் கணக்கு தொடர்பான கீழ்க்கண்ட ஆவணங்களை பெற வேண்டும்.



  • Home Loan Sanction Letter
  • Loan Outstanding Letter 
  • Loan Account Statement and
  • List of Documents Deposited with the Bank.

வங்கியில் பெறப்பட்ட ஆவணங்களுடன் வீட்டுக்கடன் பெற தேவையான கீழ்க்கண்ட ஆவணங்களையும் சேர்த்து SBI யில் சமர்ப்பிக்க வேண்டும்.


  • விண்ணப்பதாரரின் புகைப்படம்
  • புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று
  • முகவரிச் சான்று
  • வருமானச் சான்று
  • மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்)
  •  தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்)
  • 18 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி)
  • சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்)
  • உரிய அதிகாரியிடன் பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல். 
SBI-ல் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் பரீசீலிக்கப்பட்டு கடனுக்கான ஒப்புதல் வழங்கப்படும். நிலுவைத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்ட பிறகு பழைய வங்கி உங்களுடைய பழைய கடனை முடித்து வைக்கும். இந்த நடைமுறை முடிந்த உடன் உங்களுடைய சொத்துப் பத்திரங்கள் SBI-யிடம் ஒப்படைக்கப்படும்.

SBI-ல் உங்கள் கடன் தற்போதய வட்டி விகிதத்தில் இருக்கும்.

மேலும் Home Loan Take over to SBI தொடர்பாக தெரிந்து கொள்ள என்னுடைய அலைபேசி எண் - 9442327591ஐ  அழைக்கவும்:

மேலும் விவரங்களுக்கு:
D. Sendil Kumar,
Financial Consulatant,
Pondicherry / Cuddalore.
Mobile -9442327591








Sunday, 25 December 2016

பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக்கடன் பெறுவது எப்படி? (Home Loan from State Bank Of India)




D. செந்தில்குமார்  - Financial Consultant - 9442327591

பாரத ஸ்டேட் வங்கியில்  கீழ் கண்ட தேவைகளுக்கு வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது :

  • வீடு வாங்குவதற்கு
  • வீடு கட்டுவதற்கு
  • வீட்டு மனை (PLOT) வாங்குவதற்கு
  • அப்பார்ட்மண்ட்- களில் ஃப்ளாட் (FLAT) வாங்குவதற்கு
  • வீடு விரிவாக்கம் செய்வதற்கு
  • வீடு புதுபித்தல் செய்வதற்கு
  • மற்ற வங்கிகளில் உள்ள வீட்டுக்கடனை SBI க்கு மாற்றம் செய்வதற்கு

வீட்டுக்கடன் வாங்க தகுதி உடையவர்கள் யார் ?

மாத தவணை செலுத்தும் அளவுக்கு நிலையான வருமானம் உள்ளவர்கள்- குறிப்பாக -


  • மாத சம்பளம் வாங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 
  • வருமான வரி செலுத்தும் சுய தொழில் செய்பவர்கள்

SBI-ல் வீட்டுக்கடன் பெறுவதால் உள்ள நன்மைகள்:
  • மிக குறைவான வட்டி விகிதம்
  • அடமானமாக வைக்கப்படும் சொத்துக்களுக்கு அதிக பாதுகாப்பு
  • அதிகமான தவணை செலுத்தும் காலம் (30 வருடம் வரை)
  • தினசரி குறையும் கடன் நிலுவைத்தொகைக்கேற்ப வட்டி (Interest on daily reducing Balance)
  • கடன் முடியும்வரை குறைந்த ப்ரீமியத்தில் ஆயுள் காப்பீடு                                -(இது மிக நல்ல திட்டம்,  கடன் தவணை செலுத்தும் காலத்தில் விண்ண்ப்பதாரர் உயிரிழக்க நேரிட்டால், மீதமுள்ள தவணைத்தொகை முழுவதுமாக காப்பீட்டு நிறுவனத்தால் செலுத்தப்பட்டு கடன் முடிக்கப்பட்டு வாரிசுதாரரிடம் சொத்து ஆவணங்கள் ஒப்படைக்கப்படும்.- ஆக உங்கள் சொத்துக்களை வாரிசுகளுக்கு கொடுங்கள், உங்கல் கடன்களை அல்ல என்பதே இதன் நோக்கம்)

  • SBI-ல் கடன் பெற SBI-ல் சேமிப்பு கணக்கு தேவையில்லை. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்தே ECS மூலம் தவனை செலுத்தலாம்.
  • மாதத் தவனைக்கு மேற்கொண்டு நீங்கள் செலுத்தும் கூடுதல் தொகை உங்கள் அசல் நிலுவையில் வரவு வைக்கப்பட்டு மறுநாளில் இருந்து மீதமுள்ள அசல் தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். இவ்வாறு அவ்வபோது கூடுதல் தொகை செலுத்தி விரைவில் கடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம். இவ்வாறு கூடுதலாக செலுத்தப்படும் தொகைக்கு charges எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை.. 

SBI-ல் வீட்டுக்கடன் தொகை எவ்வளவு பெறமுடியும்?

உங்கள் வயது, வருமானம், மற்றும் ப்ராஜக்ட் காஸ்ட் (வீடு கட்ட தேவையான மொத்த தொகை (அ) வாங்கபோகும் வீட்டின் மொத்த மதிப்பு), இவை மூன்றையும் வைத்து தான் நிர்னயிக்கப்படுகிறது.

வயது: - பொதுவாக ஒருவர் 60  வயது(Salaried) /65 வயது (Self Employed)  வரை கடன் திருப்பி செலுத்த முடியும்..

வருமானம் : பொதுவாக ஒருவர் தனது மாத வருமானத்தில் இருந்து 50% வரை மாத தவணை செலுத்த முடியும். (Including all existing and proposed EMIs)

ப்ராஜக்ட் காஸ்ட்  : 
  • வீடு கட்ட மொத்த எஸ்டிமேஷனில் இருந்து 80%-ம், 
  • கட்டி முடிக்கப்பட்ட (Ready to Occupy)  வீடு /   ஃப்ளாட் மதிப்பில் 80%-ம்
  • வீட்டு மனை வாங்கும்போது அதன் மார்க்கெட் மதிப்பில் 70%-ம்கடனாக பெற முடியும். 

உதாரணமாக 45  வயது நபர்  ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார், மாத சம்பளமாக ரூ.35,000/- பெறுகிறார், அவர் வீடு கட்ட 40 இலட்சம் எஸ்டிமேட் வைத்திருக்கிறார் என்றால்

அவருக்கு ரூ. 17 இலட்சம் வீட்டுக்கடன் 15 வருடத்திற்க்கு ஒப்புதல் அளிக்கப்படும்

அவரது மாத சம்பளம் ரூ.70,000/- என்றால் அவருக்கு ரூ. 32 இலட்சம் வீட்டுக்கடன் 15 வருடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் 

குடும்ப உறுப்பினர்களை கூட்டு விண்ணப்ப்தாரராக (Co-Applicant) சேர்த்து, அவர்களுடைய வருமானத்தையும் கணக்கில் எடுத்து கூடுதல் கடன் தொகை பெறலாம். 

வட்டி விகிதம் :
மிக குறைந்த வட்டி விகிதமாக  ஆண்டுக்கு 7.35%-ம், வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது.

மேலும் கடன் தவணை தொகை கணக்கீடு செய்ய கிழே உள்ள லிங்கை க்லிக் செய்யவும். 

SBI Home Loan EMI Calculator


கடன் பெற தேவையான ஆவணங்கள்::


* விண்ணப்பதாரரின் புகைப்படம்
* புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று
* முகவரிச் சான்று
* வருமானச் சான்று
* மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்)
* தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்)
* 18 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி)
* சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்)
* உரிய அதிகாரியிடன் பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல்.
* கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்)

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள என்னுடைய அலைபேசி எண் - 9442327591ஐ  அழைக்கவும்:


மேலும் விவரங்களுக்கு:
D. Sendil Kumar,
Financial Consultant,
Pondicherry / Cuddalore.
Mobile -9442327591
E-mail : loans.shri@yahoo.com




















எனது மற்ற கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட லிங்க்கு-களை க்ளிக் செய்யவும்.

மானியத்துடன் வீட்டுக் கடன் பெற - பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டம் :



சிபில் ஸ்கோர் பற்றி தெரிந்துக் கொள்ள :



அன்பு நண்பர்களே,
நான் தற்போது லோன் சர்வீஸிங்க் செய்வதுடன், சீ லேண்ட் பேக்கேஜிங்க் என்ற பேப்பர் ப்ளேட்கள் தயாரிக்கும் நிறுவத்தை நடத்தி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள ரீட்டெய்லர் மற்றும் ஹோல்சேலர்களிடம் இருந்து ஆர்டர்கள் எதிர்பார்கிறேன். ஆதரவு தாருங்கள் !!!